கொலையும் செய்வான் சாப்ளின்
நாடோடியாக, கோமாளியாக, சர்வாதிகாரியாக, வேலைக்காரனாக, தங்கம் தேடிச்செல்பவனாக, குத்துசண்டை வீரனாக என எவ்வளவோ கோமாளித்தனமான வேஷங்கள் புனைந்த சார்லி சாப்ளின் ஒரேயொரு படத்தில் கொலைகாரனாக நடித்திருக்கிறார். அப்படம் Monsieur Verdoux பணக்கார விதவைகள் ஒவ்வொருவராகத் தேடிச் சென்று காதலித்து திருமணம் செய்து பிறகு சொத்துக்களை அபகரிப்பதற்காக அவர்களைக் கொலை செய்துவிட்டு பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பி வாழும் ஹென்றி வெர்டாக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சாப்ளின் நடித்திருக்கிறார் நம்ப முடியாமல் இருக்கிறதா? சாப்ளின் தோற்றம் நமக்குள் உருவாக்கியிருந்த பிம்பம் …