நாயர் சான்
எனது நண்பரும் மலையாளத் திரைப்பட இயக்குனருமான ஆல்பர்ட்டுடன் இணைந்து ஒரு திரைக்கதையை விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் சுதந்திரப்போராட்டத்தை மையமாகக் கொண்ட ஏதாவது கதை ஒன்றைத் தனக்காகச் சிபாரிசு செய்யும்படியாகச் சொன்னார் நான் உடனே நாயர் சானின் வாழ்க்கையைப் படமாக்கலாமே என்றேன். அவர் திகைத்தபடியே யார் நாயர் சான் என்று கேட்டார். அவர் ஒரு மலையாளி. சுதந்திரப் போராட்ட வீரர் கேள்விபட்டதில்லையா என்றேன். தான் அப்படியொரு பேரைக்கூட கேட்டதில்லை என்றார்.நாயர் சான் மட்டுமில்லை. இந்திய சுதந்திரத்திற்காக …