சினிமா

அர்திமிசியா.

பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த பெண் ஒவியரானஅர்திமிசியா ஜென்டிலெஸி ((ARTEMISIA GENTILESCHI அர்திமிசியாவாக நடித்திருக்கிறார். அவளது முகத்தில் கோபமும்  அவலமும் வெளிப்படும் விதம் அற்புதமானது. தன் உடலை தானே வியக்கும் போது அவளதுமுகத்தில் காணப்படும் அந்த மகிழ்ச்சி வார்தைகளால் சொல்ல முடியாதது. முன்னோடியான பெண் ஒவியரை பற்றிய சிறப்பான படமிது. அர்திமிசியா பற்றி அறியாதவர்கள் இதை ஒரு சிறந்த நாவலின் திரைவடிவமாகவும் கொள்ளலாம். ***

எலுமிச்சை அரசியல்

இஸ்ரேலிய திரைப்படமான லெமன் ட்ரீ (Lemon Tree) படத்தை நேற்றிரவு பார்த்தேன். Eran Riklis   இயக்கிய இப்படம் 2008 ல் வெளியாகி இஸ்ரேலின் சிறந்த படமாக இரண்டு தேசிய விருதுகள் பெற்றிருக்கிறது. அரசியல் எலுமிச்சைப் பழங்களை கூட விட்டுவைப்பதில்லை என்பதே படத்தின் அடிச்சரடு. சமகால அரசியல் குறித்து இத்தனை ஆழமான மனபாதிப்பு தரக்கூடிய படம் எதையும் நாம் சமீபத்தில் கண்டதேயில்லை. இவ்வளவிற்கும் படத்தில் நேரடியான அரசியல் விவாதங்கள்,வசனங்கள் எதுவும் கிடையாது. அரசதிகாரம் தனிநபர் வாழ்க்கையில் நுழைய விரும்பினால் …

எலுமிச்சை அரசியல் Read More »

சாம்பலும் பனியும்

முன்னொரு காலத்தில் மனிதர்களும் விலங்குகளும் ஒருவரோடு மற்றவர் இணைந்து இணக்கமாக வாழ்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்து பயம் கொள்ளவில்லை. ஒருவரையொருவர் பகை கொள்ளவில்லை. இரண்டும் ஒரே உயிர் இயக்கம் என்ற புரிதலோடு  ஒன்றுகலந்திருந்தனர். அதை நினைவுபடுத்துவதே எனது படத்தின் பிரதான நோக்கம் என்று கூறும் கிரிகோரி கோல்பெர்ட் (Gregory Colbert) மனிதனும் விலங்கும் ஒன்று கலந்த ஒரு மாயவெளியை தன்னுடைய ஆஷஸ் அண்ட் ஸ்நோ (Ashes and Snow) என்ற படத்தின் மூலம் உருவாக்கி காட்டியிருக்கிறார். இது ஒரு …

சாம்பலும் பனியும் Read More »

அண்டா ஹாஹசம்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளியாகி ஐம்பது வருடங்களுக்கும் மேலாகிறது. இன்றைக்கும் அந்த திரைப்படத்தின் சுவாரஸ்யம் குறையவேயில்லை. கோடை விடுமுறையின் போது சிறார்களுடன்  மீண்டும் ஒரு முறை பார்த்தேன். ஆரவாரத்துடன் அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற ஆர்வத்துடன் படத்தை பார்த்தார்கள். படம் முடிந்த போது அலிபாபாவின் சாசகங்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்து போயிருந்தன.  அன்று மாலையில் சிறுவர்கள் விளையாடும் போது ஒரு கதவை பிடித்து கொண்டு அண்டா ஹா ஹசம். அபு ஹா குகூம் திறந்திடு …

அண்டா ஹாஹசம். Read More »

சிவகங்கை சீமை

தமிழில் வெளிவந்த சரித்திரபடங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிவகங்கை சீமை. கண்ணதாசன் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்த இந்த படம் 1959ல் வெளியானது. கே. சங்கர் இயக்கியுள்ளார். படத்தில் பதினாறு பாடல்கள். வெற்றிப்படமில்லை என்றபோதும் தமிழ் சினிமாவில் இன்றும் அது ஒரு முன்மாதிரி படம். சரித்திரபடம் என்றவுடனே பளபளக்கும் ஜிகினா ஆடைகள், பிரம்மாண்டமான அரண்மனை, நீதி கேட்கும் தர்பார், அலங்காரமான தங்க வைர நகைகள், அந்தபுரம், ஆடல் பெண்கள், விஷம் கொடுத்து கொலை செய்யும் சதிகாரர்கள் , …

சிவகங்கை சீமை Read More »

டால்ஸ்டாயின் மௌனபடம்

ருஷ்ய இலக்கியமேதை டால்ஸ்டாயின் கதைகளை வாசிக்கும் போது அவரது குரல் நமக்கு நெருக்கமாக கேட்பது போலவே இருக்கும். பலநேரங்களில் அவர் ஒரு ருஷ்ய எழுத்தாளர் என்பது  கூட மறந்துவிடும். குறிப்பாக அன்னாகரீனனா படிக்கும் போது அன்னாவின் பெருமூச்சையும் விம்மலையும் காகிதத்தில் உணர்ந்திருக்கிறேன். கசாக்கை வாசிக்கையில் ராணுவவீரனின் தனிமை என் காதில் கிசுகிசுத்த குரலில் கேட்டிருக்கிறது. டால்ஸ்டாயின்குரல் எப்படியிருக்கும் என்று நானே யோசித்து கொண்டிருந்ததுண்டு. ஒரு முறை எனது நண்பர் புகழ்பெற்ற மனிதர்களின் குரல்களின் பதிவு கொண்ட குறுந்தகடு …

டால்ஸ்டாயின் மௌனபடம் Read More »

உலகசினிமாவில் ஒவியர்கள்.

உலக சினிமாவில் ஒவியர்கள் என்ற தலைப்பில் பிப்ரவரி 28 அன்று கும்பகோணம் அரசு ஒவியக்கல்லூரியில் நடைபெற்ற கவின்கலை விழாவில் பேசினேன். புகழ்பெற்ற ஒவியர்களை பற்றிய ஆவணப்படங்கள் மற்றும் முழுநீளப்படங்கள் என்ன வெளியாகி உள்ளன. ஏன் ஒவியர்களின் வாழ்க்கை படமாக்கபடுகின்றன என்பதை பற்றியதாக எனது உரை அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் மாணவர்கள் மிக உற்சாகத்துடன்  கலந்துரையாடல் செய்தார்கள். முன்னதாக கும்பகோணம் ஒவியக்கல்லூரியின் திறந்த வெளி காட்சிக்கூடத்தில்  சிற்பங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை அந்த …

உலகசினிமாவில் ஒவியர்கள். Read More »

ஜெகதி

மலையாள சினிமாவில் எப்போதும் என் விருப்பத்திற்குரிய நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார். பல படங்களை இவரது நகைச்சுவை காட்சிகளுக்காகவே பார்த்திருக்கிறேன்.  எப்போதாவது ஏசியாநெட் காணும் போது  அவரது நகைச்சுவை காட்சிகளை விரும்பி பார்ப்பதுண்டு. தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு மோகன்லால், மம்முட்டி, திலீப், ஜெயராம் என்று முன்னணி நடிகர்கள் பலரையும் தெரிந்த அளவிற்கு ஜெகதி அறிமுகமாகவில்லை. முக்கிய காரணம் அவர் மலையாளப் படங்கள் தவிர வேறு எதிலும் நடிக்காததே.  என் வரையில் இந்திய அளவிலான சமகால நகைச்சுவை நடிகர்களில் ஜெகதி …

ஜெகதி Read More »

மறக்கப்பட்ட பெண்

நேற்றிரவு திலீப் மேத்தாவின்  The Forgotten Woman  என்ற ஆவணப்படத்தை பார்த்தேன்.  படம் துவங்கிய ஒன்றிரண்டு நிமிசங்களில் இது முக்கியமான படம் என்பதை மனது உணரத்துவங்கியது. இந்தியாவில் இருபது மில்லியன் விதவைகள் இருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் நான்கு வீடுகளில் ஒன்றில் ஒரு விதவை நிச்சயம் இருக்கிறாள். அவள் பிறர் கண்ணில் படாமல், ஒதுக்கபட்டு, விலக்கபட்டு அடையாளமற்றவளாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இந்தியாவில் பெண்களாக இருப்பது எப்போதுமே இரண்டாம் நிலையாகவே கொள்ளபடுகிறது. அதிலும் விதவையாக இருக்க நேர்வது மிகுந்த அவமதிப்பும் புறக்கணிப்பும் …

மறக்கப்பட்ட பெண் Read More »

சிரித்தால் மட்டும் போதுமா ?

நாகேஷை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். ஆறு வருசங்களுக்கு முன்பு ஒரு முறை இயக்குனரான எனது நண்பர் தனது படத்தில் நடிக்க வைப்பதற்காக நாகேஷை  பார்க்க அழைத்து சென்றார். அந்த நேரத்தில் அவர் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்தார். நட்பிற்காக சில படங்கள் ஒத்துக் கொண்டதோடு சரி.  வீட்டில் எளிமையான நாலு முழ வேஷ்டி, பனியன் அணிந்தபடியே அவர் அமர்ந்திருந்த விதம் வெகு இயல்பாக இருந்தது. படத்தில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று மறுத்துவிட்டார். விடைபெறும் போது இயக்குனரிடம் என்னை எதுக்குப்பா …

சிரித்தால் மட்டும் போதுமா ? Read More »