சினிமா

இரண்டு ஆஸ்கார் படங்கள்

உலக சினிமாவில் உயர்ந்த விருது என ஒரு போதும் ஆஸ்கார் விருதை எவரும் குறிப்பிடுவது கிடையாது. கான்ஸ் விருதுக்கு கிடைக்கும் முக்கியத்துவமோ, பெர்லின் திரைப்பட விருதிற்கு கிடைக்கும் கௌரவமோ ஆஸ்காருக்கு கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆஸ்கார் விருது பெற்ற படங்கள் மற்ற உலகதிரைப்பட விழாக்களில் மிக மிக அரிதாகவே விருது பெறுகின்றன. இது தான் நடைமுறை உண்மை ஆனால் நமது ஊடகங்கள் ஆஸ்காருக்கு தரும் முக்கியத்துவம் எதையும் வேறு திரைப்பட விழாக்களுக்கு தருவதில்லை. சென்ற ஆண்டு கான்ஸ் …

இரண்டு ஆஸ்கார் படங்கள் Read More »

இரண்டு திரைக்கதையாசிரியர்கள்.

  ராபர்ட் டௌனி உலகெங்கும் திரைப்படக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இன்று வரை பாடமாக படிக்கும் திரைக்கதைகளில் ஒன்று சைனா டவுன். இதை எழுதியவர் ராபர்ட் டௌனி. ரோமன் பொலன்ஸ்கில்யின் இயக்கிய இந்த  திரைப்படத்திற்காக ராபர்ட் டௌனி ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார் பாடமாக படிக்கும் அளவு அப்படி என்ன இருக்கிறது சைனாடவுனில் ? ஒரு துப்பறியும் நிபுணரிடம் ஒரு பெண் தனது கணவன் மீது சந்தேகப்படுவதாக சொல்லி அவரை கண்காணிக்க  சொல்கிறாள். அவனும் கண்காணிக்கிறான். அதன் முடிவில் வேறு …

இரண்டு திரைக்கதையாசிரியர்கள். Read More »

கடைசிப் பெண்

ஆங்கிலத்தின் வருகை பல ஆதி இனக்குழுக்களின் மொழியை உலகிலிருந்து முற்றிலும் அழித்து ஒழித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பூர்வகுடி மக்களின் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இன்று தொன்மையான மொழியறிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்றாக்கி விட்டது ஆங்கில அதிகாரம். சமீபத்தில்  அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென்மத்திய பகுதியில் பல ஆயிரம் வருட பராம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசி பெண் மேரி ஸ்மித்  ஜோன்ஸ்  இறந்து போனார். இவள் தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண். …

கடைசிப் பெண் Read More »

ஷோலே – அசலா ? நகலா ?

திரைப்பட இயக்குனர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர், ஷோலே மாதிரி ஒரிஜினலான படம் இப்போ எங்க சார் வருது. எப்பேர்பட்ட படம் என்று அடிக்கடி வியந்து கொண்டிருந்தார். எனக்கும் ஷோலே படம் பிடிக்கும். ஆனால் அந்த படம் நிறைய படங்களில் பாதிப்பில் உருவானது என்று சொன்னேன். உடனே அவர் அது எப்படி சார். இப்போ தானே பாரீன் பிலிம்ஸ் பார்த்துட்டு அந்த பாதிப்பில் படம் பண்ணுகிறார்கள். ஷோலே 1975 ல் வெளியான படம் அதில் எப்படி …

ஷோலே – அசலா ? நகலா ? Read More »

விர்தியானா

லூயி புனுவலின் விர்தியானாவை (Luis Buñuel – Viridiana ) சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் ஒரு முறை பார்த்தேன். குறிப்பிட்ட சில இயக்குனர்களின் படங்களை மட்டுமே திரும்பத் திரும்ப பார்க்க முடிகிறது. செவ்வியல் நாவல்களைப் போல ஒவ்வொரு முறையும் அதில் சில அதிசயங்கள் கண்ணில் படுகின்றன. அந்த வரிசையில் புனுவல் மிக முக்கியமானவர். புனுவலின் திரைபடத்தின் மையக்கரு எப்போதுமே சர்சைக்கு உரியது. பல நேரங்களில் அவரது படங்கள் எழுப்பிய எதிர்வினை அரசியல் சமூக தளங்களில் வலிமையாக …

விர்தியானா Read More »

செர்ஜியோ லியோனி.

        அகிரா குரசோவாவிற்கு இணையான இன்னொரு திரைப்பட இயக்குனரைச் சொல்ல முடியுமா என்று அமெரிக்காவின் பிரபல இயக்குனர் ஸ்பீல்பெர்க்கிடம் ஒரு நேர்காணலில் கேட்டபோது அவர் ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் சொன்ன பதில், செர்ஜியோ லியோனி. (Sergio Leone) ஆனால் குரசோவா அறியப்பட்ட அளவு செர்ஜியோ லியோனியின் பெயர் கொண்டாடப்படவில்லை. அவரது படங்களை அறிந்தவர்கள் கூட அதை இயக்கியவர் செர்ஜியோ லியோனி என்று அறிந்திருக்க மாட்டார்கள். காரணம் அவை கலைப்படங்கள் அல்ல. மாறாக …

செர்ஜியோ லியோனி. Read More »

சினிமா முத்தம்.

        சட்டம் என் கையில் என்ற படம் 1978 ம் ஆண்டு வெளியானது. கமலஹாசன் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த படம். டி.என் பாலு இயக்கியிருந்தார். அப்போது நான்  பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.  சிறிய கிராமம் ஒன்றில் வசித்து கொண்டிருந்தோம். சினிமா பார்ப்பதற்கு அருகாமை நகரங்களுக்கு போய்வர வேண்டும். இதற்காகவே விடுமுறை நாட்களில் கோவில்பட்டிக்கு சென்றுவிடுவேன். அங்கே பாட்டியின் வீடு இருந்தது. இஷ்டமான நேரத்தில் சினிமாவுக்கு போய்வரலாம். சினிமாவிற்கும் இடைவேளையில் முறுக்கு வாங்கி …

சினிமா முத்தம். Read More »

ஆந்த்ரே வாஜ்தா

        The best remedy for political and social problems is to show them and to speak truly about them – Andrzej Wajda ஆந்த்ரே வாஜ்தா ( Andrzej Wajda ) போலந்தின் புகழ் பெற்ற இயக்குனர். சினிமாவை வலிமையானதொரு அரசியல் வடிவமாக மாற்றியவர். இவரது திரைப்படங்கள் போலந்தின் கடந்த கால நினைவுகளுக்குச் சாட்சியாக உள்ளன.  வாஜ்தாவின் படங்களின் வழியே தனது சொந்த அடையாளங்களை இழந்து …

ஆந்த்ரே வாஜ்தா Read More »

இரண்டு புகைப்படங்கள்

            மேலே உள்ள இரண்டு புகைப்படங்களை பாருங்கள். இரண்டுமே சாவித்திரி தான். ஒன்று திரையுலகில் நடிகையர் திலகமாக புகழ் பெற்று விளங்கிய சாவித்திரி, மற்றது தன்னுடைய மனத்துயரை தாங்கிக் கொள்ள முடியாமல் குடி, போதை மருந்து என்று சரணடைந்து உடல்மெலிந்து தன்னை தானே அழித்துக் கொண்ட சாவித்திரியின் இறுதி நாளின் புகைப்படம். இந்த இரண்டு புகைப்படங்களுக்கு இடையில் எத்தனையோ நினைவுகள் ஒளிந்திருக்கின்றன. இதை உற்று பார்க்கும் போது காலம் கருணையற்றது …

இரண்டு புகைப்படங்கள் Read More »

நூரெம்பெர்க் விசாரணை.

      நேற்றிரவு ஹாலிவுட் கிளாசிக் படங்களில் ஒன்றான  ஜட்ஜ்மெண்ட் அட் நூரெம்பெர்க் (Judgment at Nuremberg ) திரைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். தமிழ் சினிமாவில் கோர்ட் ரூம் டிராமா எனப்படும் தனிவகை படங்கள் மிகக் குறைவே. ஆனால் நீதிமன்ற காட்சிகளும் அதன்வாதபிரதிவாதங்களுக்காகவும் பராசக்தி துவங்கி விதி முதலான பல படங்கள் வெற்றிகரமாக ஒடியிருக்கின்றன. குற்றம், தண்டனை குறித்த ஆழ்ந்த பார்வைகள் கொண்ட படங்கள் தமிழில் உருவாக்கபடவேயில்லை. புகழ்பெற்ற எழுத்தாளரான காப்காவின் விசாரணை (The Trail by Franz …

நூரெம்பெர்க் விசாரணை. Read More »