அறிவிப்பு

ஏழு வயது வாசகி

மூன்றாம் வகுப்பு படிக்கும் தனது மகள் பிரகதியாழினி அவளுடைய சிறு குறிப்பேட்டில் பின்வருமாறு குறித்து வைத்திருந்தாள் என அவளது தந்தை ரவி அனுப்பி வைத்திருந்தார். பள்ளி மாணவர்கள் என்னை விருப்பத்துடன் வாசிக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிரகதியாழினிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். அவர் தமிழில் எழுதிட பெற்றோர்கள் உதவிட வேண்டும்.

இனிக்கும் இருள்

எழுத்தாளர் கோ.புண்ணியவான், மலேசியா கல் மனங்களிலும் கனிவு பிறக்கும் என்பது இக்குறும்படத்தின் கதைப் பொருள். அதனை கலைநயம் குன்றாமல் கொண்டு செல்கிறார் ஹரி பிரசாத். நிலத்தை எப்படியாவது பார்வையற்ற தம்பதியினரின் தலையில் கட்டிவிடவேண்டும் என்று கண்ணையா புரோக்கரும் அவர் சகாவும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் பார்வைக்குறைவானவர்கள் என்று முதற் சந்திப்பிலேயே தெரிந்துகொள்ளும் கண்ணையா ஓரு கரிசனமான மன அசைவை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். வீட்டு மனையின் நிலப்பட்டாவை வாங்க பணம் தேவையென்று சொன்னதும் வீட்டில் வந்து வாங்கிக்கொள்ளும்படி சொல்கிறார்கள் தம்பதிகள். …

இனிக்கும் இருள் Read More »

ஆங்கில இதழில்

எனது கர்னலின் நாற்காலி குறுங்கதைகளின் தொகுப்பினை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறுங்கதை ஒன்று https://borderlessjournal.com இதழில் வெளியாகியுள்ளது. நன்றி டாக்டர் சந்திரமௌலி.

திணைகள் விருது விழா

திணைகள் கவிதை விருது விழா நவம்பர் 23 ஞாயிறு சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெறுகிறது. கவிஞர் பூவிதழ் உமேஷ் விருது பெறுகிறார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு விருது வழங்கி உரையாற்றுகிறேன்.

குறும்பட விழா

நேற்று ஹரிபிரசாத் இயக்கிய இருள் இனிது குறும்படத்தின் அறிமுகவிழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள். இயக்குநர் துரை. செந்தில்குமார், இயக்குநர் ஞானவேல், இயக்குநர் ஸ்ரீகணேஷ், இயக்குநர் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு குறும்படம் குறித்த பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி. எனது எல்லாச் செயல்பாடுகளுக்கும் துணை நிற்கும் அன்பு வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மிக்க நன்றி. எனது அழைப்பை ஏற்று வருகை தந்த அன்பு நண்பர் …

குறும்பட விழா Read More »

பி.எம். மூர்த்தி : வல்லினம் விருது.

எனது நேசத்திற்குரிய நண்பரும் மலேசியாவின் மிகச்சிறந்த கல்வியாளருமான பி.எம். மூர்த்தி இந்த ஆண்டிற்கான வல்லினம் விருது பெறுகிறார். டிசம்பர் 21 அன்று மலேசியாவில் வல்லினம் விருதளிப்பு நடைபெறுகிறது. பி.எம். மூர்த்திக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். அவரது துணைவியார் மற்றும் பிள்ளைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். மலேசிய தேர்வு வாரியத்தின் உதவி இயக்குநராக மூர்த்தி மேற்கொண்ட பணிகள் மிகுந்த பாராட்டிற்குரியவை. அவரது விருது விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஆனால் டிசம்பர் 25 எனது …

பி.எம். மூர்த்தி : வல்லினம் விருது. Read More »

இருள் இனிது குறும்பட விழா

எனது மகன் ஹரிபிரசாத் இயக்கியுள்ள இருள் இனிது குறும்படத்தின் திரையிடல் மற்றும் அறிமுகவிழா நவம்பர் 14 வெள்ளிக்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஞானவேல், இயக்குநர் துரைசெந்தில்குமார், இயக்குநர் ஸ்ரீகணேஷ், இயக்குநர் பொன்குமார் கலந்து கொள்கிறார்கள். அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ••