அறிவிப்பு

தமிழ் சங்கம் விருது

 இந்த ஆண்டிற்கான தமிழ் சங்கம் விருது எனக்கு வழங்கப்பட உள்ளதாக சேலம் தமிழ் சங்கம் அறிவித்துள்ளது. இவ்விருது பதினைந்தாயிரம் ரொக்கமும் நினைவுப்பரிசும் உள்ளடக்கியது   நவீன தமிழ் இலக்கியத்திற்கு முக்கியப் பங்களிப்பு செய்துள்ளதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 26ம் தேதி ஞாயிறு காலை 10 மணி அளவில் சேலத்தில் உள்ள தமிழ் சங்க கட்டிடத்தில் நடைபெற உள்ளது. விருப்பமான நண்பர்கள் வாசகர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி …

தமிழ் சங்கம் விருது Read More »

பாலஸ்தீனப் பயணம்

எனது நண்பரும் தீவிர அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான மதுரையைச் சேர்ந்த அ.முத்துகிருஷ்ணன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார், பாலஸ்தீனத்தின் நெருக்கடிநிலையை உலகின் கவனத்திற்கு எடுத்துரைக்கவும் காசா மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஆசியாவின் 18 நாடுகளைச் சேர்ந்த 500 பேர் பாலஸ்தீனம் நோக்கி ஒரு பெரும் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். டிசம்பர் 2 தேதி டெல்லியில் இருந்து கிளம்பும் இந்தப் பயணம் ஜனவரி 4ம் தேதி நிறைவுபெறுகிறது, தில்லியில் இருந்து கிளம்பி வாகா எல்லை …

பாலஸ்தீனப் பயணம் Read More »

கலந்துரையாடல்

களம் இலக்கிய அமைப்பின் சார்பில் திருச்சியில் நவம்பர் 11 மாலை ஆறுமணிக்கு கதைக்குள் வராதவர்கள் என்ற தலைப்பில் நான் பேச இருக்கிறேன், அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வு உள்ளது, விருப்பமான நண்பர்கள் யாவரும் வரலாம் நாள் :  11.11.10 இடம் :  ரவி மினி ஹால், கரூர் பைபாஸ் சாலை, திருச்சி நேரம் : மாலை 6 மணி

துயில்

இரண்டு ஆண்டுகளாக எழுதி வந்த எனது புதிய நாவல் துயில் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது, இந்த நாவலின் இறுதிவடிவத்தை சீர்செய்து கொண்டிருப்பதால் இணையத்தில் எழுத நேரம் கிடைப்பதில்லை, ஒரு நாவலை எழுதுவதற்கு எனக்கு ஒன்றரை வருசங்கள் தேவைப்படுகிறது, அதை எடிட் செய்ய தினமும் ஆறு மணி நேரம் வேலை செய்தால் கூட ஆறு   மாதமாகி விடுகிறது. நாவலை எழுதி இறுதிவடிவம் கொண்டுவருவது எப்போதுமே ஒரு சவால், ஆனால் அந்த உருமாற்றம் தரும் ஆனந்தம் அலாதியானது உயிர்மை …

துயில் Read More »

பெங்களுர் சந்திப்பு

பெங்களுரில் நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து  கொள்ள அக்டோபர் 3ம் தேதி ஞாயிற்றுகிழமை அங்கு வருவதாக உள்ளேன். ஒரு நாள் முன்னதாக அக்டோடபர் 2ல் வந்துவிடுவேன், அன்று நண்பர்கள் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வினை ஒழுங்குசெய்திருக்கிறேன். இது ஒரு திறந்த உரையாடலுக்கான நிகழ்வு. ஆகவே நண்பர்களுடன் கூடிப்பேசி ஒரு கோப்பைத் தேநீரைப் பகிர்ந்து கொள்வது தான் நிகழ்வின் பிரதானம். விருப்பமுள்ள நண்பர்கள் அனைவரும் வரலாம் நாள்: 2.10.10 சனிக்கிழமை நேரம் : மாலை …

பெங்களுர் சந்திப்பு Read More »

நிகழ்வுகள்

youtube உள்ள எனது நேர்காணலின் ஏழு பகுதிகளுக்கான இணைப்புகள் இவை https://www.youtube.com/watch?v=rvSrAk1cJM8 Part 1 https://www.youtube.com/watch?v=XJFGE_nbcZs Part 2 https://www.youtube.com/watch?v=ZaxK6Nhz6kA Part 3 https://www.youtube.com/watch?v=vZ3kormDsEI Part 4 https://www.youtube.com/watch?v=UTIefcrWq4Q Part 5 https://www.youtube.com/watch?v=7AfUg1PDrUM Part 6 https://www.youtube.com/watch?v=YaXZpPae0w8 Part 7 ** நேற்று ஷாஜியின் புத்தக உரையாடல் நிகழ்வில் இயக்குனர் மணி ரத்னம் அவர்களைச் சந்தித்தேன், மாறாத எளிய புன்னகை, வார்த்தைகளை எண்ணிச் செலவிடும் அவரது இயல்பு, மேடையில் அவர் பேசிய ஐந்து நிமிசப் பேச்சினுள் இயல்பாக …

நிகழ்வுகள் Read More »

நேர்காணல் வீடியோ

இலக்கியம். புத்தகவாசிப்பு. பயணம் சார்ந்த எனது விரிவான நேர்காணலை நண்பர் ராம்குமார் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார், ஏழு பகுதிகளாக உள்ள இந்த நேர்காணலின் முதல் பகுதி தற்போது யூடியூப் இணையதளத்தில்  உள்ளது, https://www.youtube.com/watch?v=rvSrAk1cJM8

விருது

இலக்கியம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அக்கறை குறித்த எனது பங்களிப்பிற்காக  ஜேசிஸ் அமைப்பு இளம் சாதனையாளர் என்ற விருதை எனக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது,  இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி செப்டம்பர் 15ம் தேதி மாலை 6 மணி அளவில் ராணிப்பேட்டையில் நடைபெறுகிறது.

ஷாஜியின் நூலரங்கு

உயிர்மை நடத்தும் ஷாஜியின்  இசையின் தனிமை நூல்  பற்றிய ஒரு உரையாடல் நிகழ்வு 2010 செப்டம்பர் 18 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் சென்னை ஃபிலிம் சேம்பர் திரை அரங்கில் நடைபெற உள்ளது, இதில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படியாக அழைக்கிறேன் •• ஷாஜியின் இசையின் தனிமை நூல் ஒரு உரையாடல் 2010 செப்டம்பர் 18 சனிக்கிழமை மாலை 6 மணி ஃபிலிம் சேம்பர் திரை அரங்கம் ஜெமினி, …

ஷாஜியின் நூலரங்கு Read More »

நன்றி

மதுரையில் எனது ஐந்து புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிறைந்து இடமின்றி 200 பேர்களுக்கும் மேலாக வெளியே நின்று கொண்டிருந்தனர், எனது நண்பர்கள். விருப்பமான எழுத்தாளர்கள். அன்பிற்குரிய வாசகர்கள். இணைய பதிவாளர்கள். பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக்கினார்கள். என்னையும் எழுத்தையும் நேசிக்கும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனது புத்தகங்களை தொடர்ந்து வெளியிடும் உயிர்மை பதிப்பகத்திற்கும் அன்பு நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும். என் …

நன்றி Read More »