சிறந்த இந்தியப்படம் பரிசு


 


 


 


 


 



நான் கதை வசனம் எழுதிய முரளி மனோகர் இயக்கிய கர்ணமோட்சம் திரைப்படம் நவம்பர் மாதம் 5 மற்றும் 6 தேதிகளில்  புதுடெல்லியில் நடைபெற்ற   International Students Film Festival,.First Frame 2008     என்ற பன்னாட்டு திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்தபடமாக தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 25000 பரிசும் பாராட்டும் பெற்றுள்ளது.



முன்னதாக தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு குறும்பட போட்டிகளில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு பத்திற்கு மேலான விருதுகளை பெற்றுள்ளது கர்ணமோட்சம். அத்தோடு  இந்தியாவின் முக்கிய திரைப்பட விழாக்கள் அனைத்திலும் பங்கு பெற்று சிறப்பு பெற்றது.



திரைப்படக்கல்லூரியில் பயின்ற மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதை நோக்கமாக கொண்ட பர்ஸ்ட் பிரேம் திரைப்பட விழா கடந்த எட்டு ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.



இந்த விழாவில் ஜெர்மன், இஸ்ரேல் ,போலந்து, பிரான்ஸ்,  செர்பியா. துருக்கி, தைவான், சிங்கப்பூர் , ஆஸ்திரியா, பெல்ஜியம் உள்ளிட்ட இருபத்தைந்து நாடுகளில் இருந்து படங்கள் திரையிடப்பட்டன.



இந்தியாவில் உள்ள அனைத்து திரைப்பட கல்லூரிகள், ஊடகவியல் பள்ளிகள் யாவிலும் இருந்து போட்டியில் படங்கள் கலந்து கொண்டன. மொத்தம் 91 படங்கள் போட்டியில் கலந்து கொண்டிருந்தன.



பர்ஸ்ட் பிரேம் திரைப்பட விழாவில் தமிழ் படம் ஒன்று இந்தியாவின் சிறந்த குறும்படமாக தேர்வுசெய்யபடுவது இதுவே முதல்முறை.



வெற்றி பெற்ற முரளிமனோகருக்கு என் வாழ்த்துகள்.


 

0Shares
0