அறிவிப்பு

அ. முத்துலிங்கம்

எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் அ. முத்துலிங்கம் தனக்கான இணையதளம் ஒன்றினை உருவாக்கியிருக்கிறார்.  அவரது எழுத்துகள் தொலைதூர தேசங்களுக்கு சென்று பல வருசங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய சகோதரன் தனது அனுபவங்களை குடும்பத்தோரிடம் சொல்வது போன்ற நெருக்கமும் நெகிழ்வும் கொண்டது. முத்துலிங்கம் எழுத்துகளில் காணப்படும் உள்ளார்ந்த பகடி நினைத்து நினைத்து சிரிக்க கூடியது. கனடாவில் வசிக்கும் அவர் உலகநாடுகளில் பாதியைச் சுற்றிவந்தவர். அன்றாட நிகழ்வுகளை இத்தனை ரசனையோடும் ஈடுபாடுட்டோடும் அவதானித்து அதிலிருந்து தனது படைப்புகளை உருவாக்கும்  ஒரு …

அ. முத்துலிங்கம் Read More »

பிறந்த நாள்

இன்று எனது பிறந்த நாள். பல வருசங்கள் பிறந்த நாள் அன்று வீட்டில் இல்லாமல் சுற்றி அலைந்திருக்கிறேன்.  சாலையோர கடைகளில் தனியே உணவருந்திவிட்டு பகிர்ந்து கொள்ள யாருமின்றி  தனித்திருந்த நாட்கள் அவை. பள்ளி காலங்களில் பிறந்த நாள் வருவதற்கு  ஆண்டின் துவக்கத்திலிருந்தே நாட்களை எண்ணிக்கொண்டேயிருந்ததை நினைக்கையில் வேடிக்கையாக இருக்கிறது. அன்றைய குதுôகலம் புத்தாடை பரபரப்பு இன்றில்லை. ஆனால் விருப்பமான நண்பர்கள், மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாட பண்டிகைகளை விட பிறந்த நாளே சரியானதாக படுகிறது. என் மீதும் …

பிறந்த நாள் Read More »

இணையத்தில் கர்ண மோட்சம்

  நான் கதை வசனம் எழுதி முரளி மனோகர் இயக்கிய தேசிய விருது பெற்ற  குறும்பட்ம் கர்ண மோட்சம்’  ஆங்கில சப்டைட்டில்களுடன் இரண்டு பாகங்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது   அதற்கான இணைப்புகள் :   https://www.youtube.com/watch?v=3W87_I79JKA   https://www.youtube.com/watch?v=PgcqGpl3OqM

பாலா. நெட்

தமிழ் சினிமாவின் தனித்துவமான ஆளுமையான  இயக்குனர் பாலா தனக்கென பிரத்யேக இணையதளம் ஒன்றினை உருவாக்கியீருக்கிறார். இந்த இணையதளத்தில் அவரது திரைப்படங்கள். நேர்காணல்கள் மற்றும் சுயவிபர குறிப்புகள் அவரை பற்றிய செய்திகள் கட்டுரைகள் வெளிவராத அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன. இந்த இணைய தளத்தில் இருந்து அவருக்கு  நேரடியாக மின்னஞ்சல்கள் அனுப்பும் வசதி உள்ளது. https://www.directorbala.net/

அவன் இவன்

தேசிய விருது பெற்றுள்ள இயக்குனர் பாலாவின் புதிய படமான அவன் இவன் படத்திற்கு நான் வசனம் எழுதுகிறேன். இந்த படம் அவரது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டது. படப்பிடிப்பு செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதியில் பிப்ரவரியில் நடைபெறுகிறது.  என் நண்பர்கள் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், பாடலாசிரியர் நா. முத்துகுமார் என்று நட்புவட்டம் ஒன்று சேர ஒரு படத்தில் பணியாற்றுவது மிக சந்தோஷமான விசயம்.  நேற்று படத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.  

கர்ண மோட்சம் தேசிய விருது

நான் கதை திரைக்கதை வசனம் எழுதி முரளிமனோகர் இயக்கிய கர்ணமோட்சம் குறும்படம் இந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கிறது. சிறந்த கலை மற்றும் கலாச்சார பிரிவில் (Best Arts/Cultural Film )இக்குறும்படம் சிறந்த படமாக தேர்வு பெற்று ரஜத் கமல் விருதை பெற்றுள்ளது.  இப்படம் சென்னை எம்.ஜி. ஆர். திரைப்பட கல்லூரியின் சார்பில் தயாரிக்கபட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறந்த படம் சிறந்த இயக்கம் சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட மூன்று தமிழக அரசின் விருதுகளுடன் இருபதிற்கும் …

கர்ண மோட்சம் தேசிய விருது Read More »

இணைய கிருமி

நேற்றிரவு எனது நண்பர் தொலைபேசியில் அழைத்து உங்கள் இணையம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. யாரோ விஷமிகள் இதை செய்திருக்கிறார்கள். உடனே சரி செய்யுங்கள் என்றார். மனம் உடைந்து போய்விட்டேன்.  இரண்டு ஆண்டு உழைப்பு மற்றும் எனது அன்றாட தொடர்பு அத்தனையும் நாசமாக்கபட்ட வலியில் தூக்கமில்லை இணையத்தில் இப்படியான விஷக்கிருமிகள் பரவியிருப்பது எத்தனை ஆபத்தானது.. அத்துடன் என் இணையத்தை தொடர்பு கொள்ளும் பலரும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க துவங்கியிருந்தார்கள்எனக்கு இணைய தொழில் நுட்பம் எதுவும் தெரியாது. எனது இணைய முகப்பில் …

இணைய கிருமி Read More »

உப பாண்டவம் புதிய பதிப்பு.

எனது உப பாண்டவம் நாவலின் நான்காவது புதிய பதிப்பினை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மிக சிறப்பாக வெளிவந்துள்ள இந்த பதிப்பின் விலை. ரூ.150 கிடைக்குமிடம் புத்தக கண்காட்சி கடை எண் : P 255 & 256  விஜயா பதிப்பகம்

எனது புதிய புத்தகங்கள் கிடைக்குமிடம்

  மலைகள் சப்தமிடுவதில்லை.  (கட்டுரைகள் ) பக்கம்: 240      விலை:140 இந்த நூலில் தஸ்தாயெவ்ஸ்கி, தால்ஸ்தாய். செகாவ். இதாலோ செவோ, கார்க்கி, ஷெல் சில்வர்ஸ்டைன், பாஷோ போன்ற இலக்கிய ஆளுமைகளை பற்றியும், இயற்கை குறித்த எனது புரிதல் மற்றும்  அது சார்ந்த நினைவுகளை விவரிக்கும் சேவற்சண்டை, இந்தியாவை நடந்தே சுற்றிய மனிதர். தாமரை பூத்த குளம், ரயிலோடும் தூரம், போன்ற வாழ்வியல் அனுபவ கட்டுரைகளுமாக மொத்தம் 48 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நகுலன் வீட்டில் யாருமில்லை (குறுங்கதைகள் …

எனது புதிய புத்தகங்கள் கிடைக்குமிடம் Read More »

விக்ரமாதித்யன்

தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனுக்கு இந்த ஆண்டிற்கான “விளக்கு` இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.   அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் கலாசார அமைப்பான “விளக்கு` புதுமைப்பித்தன் நினைவாகத் தமிழின் சிறந்த படைப்பிலக்கியவாதிகளுக்கு ஒவ்வோராண்டும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. இந்தவிருதில்  ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசும்,​ பாராட்டுப் பத்திரமும் அடங்கும்.   62 வயதான கவிஞர் விக்ரமாதித்யன் “ஆகாசம் நீல நிறம்`, “ஊரும் காலம்`, “உள்வாங்கும் உலகம்` …

விக்ரமாதித்யன் Read More »