எனது புத்தகங்கள்

 


அன்புள்ள வாசக நண்பர்களுக்கு,


உயிர்மை பதிப்பகம் இந்த ஆண்டு ஜனவரி சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிட்ட எனது 8 நூல்களும் இப்போது உயிர்மை இணைய தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. 


உயிர்மை பதிப்பகம் ஆன்லைன் மூலம் இந்த புத்தகங்களை ஆர்டர் செய்யும் வாசகர்களுக்கு சலுகை விலையினை ஏப்ரல் 30 வரை அறிவித்திருக்கிறது. 


8 நூல்களின் மொத்த விலை ரூ.1735. இந்தியாவில் இது மொத்தமாக வாங்குபவர்களுக்கு ரூ.1500/-க்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் தபால் செலவு இலவசம். 


இந்தியாவிற்கு வெளியே இந்த 8  நூல்களும் தபால் செலவு உட்பட ரூ.3620/-. இந்த சிறப்பு சலுகை திட்டத்தில் ரூ.3150க்கு கிடைக்கிறது. 


ஆன் லைன் மூலம் நீங்கள் நேரடியாக இந்த நூல்களையும் எனது பிற நூல்களையும் வாங்கலாம்


மேலும் விபரங்களுக்கு நீங்கள் www.uyirmmai.com- ன் கீழ்க்கண்ட இணைப்பிற்கு செல்லலாம். 


https://www.uyirmmai.com/Publications/Default.aspx


https://www.uyirmmai.com/Publications/ViewCombo.aspx?bid=10001


மேலதிக தகவல்கள் விளக்கங்கள் தேவை எனில் uyirmmai@gmail.com


 என்ற முகவரிக்கு எழுதலாம் அல்லது கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.   91-44-24994448


இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் எனது புதிய நூல்கள் இவை. 


1.அதே இரவு அதே வரிகள்


அட்சரம்  இலக்கிய இதழில் வெளியான மொழிபெயர்ப்புகளின் தேர்ந்தெடுத்த தொகை நூல் இது. இதில் மார்க்வெஸ், இசபெல் ஆலண்டே, போர்ஹே, குந்தர் கிராஸ், மிலாராட் பாவிக், மிலன் குந்தேரா, காப்கா, தஸ்தாயெவ்ஸ்கி, மாபௌஸ், ஜோசே சரமாகோ, கென்சுபரோ ஒயி, ஏ.கே.ராமானுஜம் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகள் இதில்  இடம் பெற்றுள்ளன.


2. சித்திரங்களின் விசித்திரங்கள்


நவீன ஓவியம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்ற வர்களுக்கும், சினிமாவிற்கும் ஓவியத்திற்குமான தொடர்பைப் புரிந்துகொள்ள ஆசைப்படுகின்றவர் களுக்கும், ஓவியத்தின் பின்உள்ள கதைகளை, ஓவிய னின் வாழ்வை உணர்ந்து கொள்ள முற்படுகின்றவர் களுக்குமான எளிய அறிமுகமே சித்திரங்களின் விசித்திரங்கள்.   


3. கோடுகள் இல்லாத வரைபடம்


உலகைச் சுற்றிவந்த பிரசித்தி பெற்ற யாத்ரீகர்களான யுவான்சுவாங், பாஹியான், வாஸ்கோட காமா, அல்பெருனி, மார்கோ போலோ உள்ளிட்ட பதிமூன்று பயணிகளைப் பற்றியது கோடுகள் இல்லாத வரைபடம்.


4. நம் காலத்து நாவல்கள்


செவ்வியல் நாவல்களை மறுவாசிப்பு செய்தும் அறியப் படாத நாவல்களை அறிமுகப்படுத்தியும்,  உயிர்மையில் எழுதிச் செல்லும் காலம் என்ற தொடரை எழுதி அது பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது.  ஐந்து வருடங்களுக்கு முன்பாக வாக்கியங்களின் சாலை என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த தனி நூல் ஒன்று வெளிவந் தது. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து அத்தோடு பிரதான இலக்கிய இதழ்களில் உலக இலக்கியம் குறித்து எழுதிய கட்டுரைகள் யாவும் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே நூலாக வெளியாகின்றது.


5.பதினெட்டாம் நூற்றாண்டின் மழை


கதைகள் தான் சொல்ல வந்த விஷயத்தை மட்டுமே புரிய வைப்பதில்லை. அவை புலன்களோடு விளையாடு கின்றன. புலன்களைக் கிளர்ந்து எழச் செய்கின்றன. அல்லது ஒடுக்குகின்றன. வாழ்வனுபவம் உருவாக்காத நினைவுகளை நமக்குள் உருவாக்குகின்றன. எல்லோரது கதைகளின் அடியிலும் சுயசரிதையின் மெல்லிய நீரோட் டம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது எழுத்தாளன் மட்டுமே அறிந்த நதி.  இது எட்டாவது சிறுகதைத் தொகுதி.


6. காற்றில் யாரோ நடக்கிறார்கள்.


புத்தகங்கள், சினிமா, இசை பற்றிய பகிர்தல்களாக உள்ள இக்கட்டுரைகள், பெரும்பான்மை இணையத்தளத்தில் வெளியானவை. அத்தோடு கல்குதிரை, கணையாழி, அட்சரம் போன்ற இலக்கிய இதழ்களிலும், விகடன், குமுதம், தினமணி, சண்டே இந்தியன் போன்ற வார இதழ்களிலும் வெளியானவை.


7. உலக சினிமா


 உலக சினிமா குறித்து தொகுத்த இந்த நூலில் சினிமா வரலாறு, உலகின் சிறந்த நூறு படங்கள் பற்றிய அறிமுகம், புகழ் பெற்ற இயக்குனர் களின் நேர்காணல்கள், உலகின் சிறந்த இயக்குனர் களைப் பற்றிய கட்டுரைகள், சினிமா குறித்த ஆழமான பார்வை கொண்ட இந்நூலின் புதிய பதிப்பில் புதிய கட்டுரைகளும், புகைப்படங்களும் சேர்க்கப்பட்டிருக் கிறது. உலக சினிமா பற்றிய ஒரு தலைசிறந்த கையேடு.


8. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்


2005 வரையிலான 90 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும்  மிகுபுனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. புதியதொரு தமிழ்ப் புனைவியலை உருவாக்குகின்ற சிறுகதைகள் என்பதே அதன் சிறப்பம்சம். 


**

0Shares
0