மதுரை புத்தகக் கண்காட்சியில்
மதுரைப் புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நாவல் வெளியீடு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தோழர் எஸ். ஏ.பெருமாள் வெளியிடத் தீபா வெங்கடாசலம் பெற்றுக் கொண்டார். ஐந்து நாட்கள் மதுரையிலிருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. நான் விரும்பியது போலவே புதிய நாவல் அதிகமும் இளைஞர்களால் வாங்கிச் செல்லப்பட்டது சந்தோஷம் அளித்தது. இந்நாவலைப் படமாக்குவதற்காக மூன்று இயக்குநர்கள் தொடர்பு கொண்டார்கள். ஒரு நாவல் வெளியான சில தினங்களிலே அதன் உரிமையை வாங்குவதற்குத் திரைத்துறையினர் முன்வந்திருப்பது வரவேற்க …