விகடன் தீபாவளி மலரில்
விகடன் தீபாவளி மலரில் எனது கட்டுரை வெளியாகியுள்ளது
விகடன் தீபாவளி மலரில் எனது கட்டுரை வெளியாகியுள்ளது
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் எழுத்தாளர் வண்ணதாசன். பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் இருவருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கிறது. இதற்கான பட்டமளிக்கும் விழா இன்று அக்டோபர் 22 -ம் தேதி தஞ்சையில் நடைபெறுகிறது. தனது கவித்துவ எழுத்துகளால் தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்ந்தவர் வண்ணதாசன். அன்பின் துணை கொண்டு இந்த உலகின் குரூரங்களை, அபத்தங்களை வென்றுவிட முடியுமெனக் காட்டும் அற்புதமான படைப்புகளை உருவாக்கியவர் வண்ணதாசன். ரெனார், மோனே போன்ற புகழ்பெற்ற ஒவியர்கள் இயற்கையைத் தனது தூரிகையின் வழியே வசீகரமான ஒவியங்களாக …
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று சென்னை தக்கர் பாபா வித்யாலயாவில் காந்தியின் வழியில் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அரங்கு நிரம்பிய கூட்டம். நிறைய இளைஞர்கள். நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த காந்தி கல்வி மையத்திற்கும், அண்ணாமலை, சரவணன், சுபாஷிணி, மோகன், பிரேமா அண்ணாமலை, விப்ர நாராயணன் , மாருதி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. நிகழ்வைப் பதிவு செய்து ஒளிபரப்பிய ஸ்ருதி டிவிக்கும், கபிலன் மற்றும் சுரேஷிற்கு அன்பும் நன்றியும். நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த இயக்குனர் வசந்தபாலன், …
மகாத்மா காந்தி குறித்து பொதிகை தொலைக்காட்சி யில் ஒளிபரப்பான எனது நேர்காணல். S.Ramakrishnan interview | மாமனிதர் மகாத்மா | MAAMANIDHAR MAHATMA Desanthiri Pathippagam https://youtu.be/qO1sd7wENm4
எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் மனைவி கணவதி அம்மாள் இன்று புதுச்சேரியில் காலமானார். அவரது மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள். கி.ராவிற்கு உற்றதுணையாக இருந்தவர் கணவதி. கடந்தவாரம் கி.ரா வீட்டிற்குப் போயிருந்த போது உடல்நலமற்றிருந்த கணவதி அம்மாவைச் சந்திதேன். படுக்கையில் தானிருந்தார். நினைவு தப்பியிருந்தது. அவரது உடல் நலம் குறித்த கவலையும் வேதனையும் கி.ரா முகத்தில் படிந்திருந்ததைக் காணமுடிந்தது. ஓர் எழுத்தாளன் உருவாவதற்கு அவனது குடும்பச் சூழல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. வீட்டில் எழுதுவதற்கான சூழல் கிடைக்காத எழுத்தாளர்களே …
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் காந்தி குறித்த உரையாடல்கள், சொற்பொழிவுகள், பொது நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று சென்னையிலுள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் காந்தியின் வழியில் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த இருக்கிறேன். அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் பதிவு செய்த நாள் 24.09.2019
நேற்று புதுவையில் நடைபெற்ற கிரா -97 நிகழ்வை இந்து தமிழ் திசை நாளிதழ் விரிவாகப் பதிவு செய்துள்ளது. இந்து தமிழ் திசை ஆசிரியர் அசோகன், நடுப்பக்க ஆசிரியர் சமஸ், பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்கலைஞர்களுக்கு நன்றி.
நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற கி.ரா- 97 நிகழ்வில் கலந்து கொண்டேன். கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராவின் பிறந்தநாளை எல்லோரும் இணைந்து சிறப்பாகக் கொண்டாடினோம். குடும்பத்துடன் அவரிடம் ஆசி பெற்றேன். நிகழ்விற்கு அரங்கு நிரம்பிய கூட்டம். கி.ரா மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார். நிகழ்வில் கி.ராவின் சிறுகதைகள் பற்றிச் சிறிய உரையொன்றை நிகழ்த்தினேன். கி.ராவின் புறப்பாடு என்ற சிறுகதை அற்புதமானது. கரிசல் விவசாயி நிலத்தின் மீது எவ்வளவு பிடிப்பு வைத்திருக்கிறான் என்பதற்கு இந்தக் கதையில் ஒரு நிகழ்வு சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது …
நேற்று வேலூரில் ஜே.எம். கூட்ஸி எழுதிய பீட்டர்ஸ்பெர்க் நாயகன் (The Master of Petersburg / J.M. Coetzee) நாவல் குறித்து உரையாற்றினேன். இந்த நாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. சா. தேவதாஸ் இந்நாவலை மொழியாக்கம் செய்துள்ளார். வேலூரில் மாலை நான்குமணி முதலே மழையாக இருந்தது. மழைக்குள் நனைந்தபடியே பார்வையாளர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அரங்கு நிரம்பிய கூட்டம். இந்த உரையைக் கேட்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் அதிகம். நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த கனலி …
கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனின் 97வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை புதுச்சேரியில் நடைபெறவுள்ள கி.ரா ’97 விழாவில் கலந்து கொள்கிறேன். நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள இளவேனிலுக்கு அன்பும் நன்றியும். நாள் : 16.09.2019 நேரம்: காலை 11 மணி இடம் :தொல்காப்பியர் அரங்கம் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரி தொடர்புக்கு: 9944540421 9842382339 பதிவு செய்த நாள் 15.09.2019