கண்ணூர்
கேரள மாநிலம் கண்ணூரில் 16ம் மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறவுள்ள எழுத்தாளர் சங்க மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன். நாளை கண்ணூர் செல்கிறேன்.
கேரள மாநிலம் கண்ணூரில் 16ம் மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறவுள்ள எழுத்தாளர் சங்க மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன். நாளை கண்ணூர் செல்கிறேன்.
நான் சென்னைக்கு வந்து 28 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எனது சென்னை அனுபவங்களை ஒரு வீடியோ தொடராக வெளியிட நினைக்கிறேன். தேசாந்திரி யூடியூப் சேனலில் இந்தத் தொடர் வாரம் ஒன்றாக வெளியாகவுள்ளது. இதில் சென்னை வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களுடன் சந்தித்த எழுத்தாளர்கள், திரையுலக அனுபவம் மற்றும் பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சென்னை குறித்து எழுதியது, பேசியது, சென்னையின் வரலாறு என யாவற்றையும் ஒருங்கிணைத்து உரையாற்றயிருக்கிறேன். இதன் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது சென்னையும் நானும் முன்னோட்டம் https://youtu.be/70svcZnlR9U ••• …
நவம்பர் 14 வியாழன் மாலை கோவை ப்ரூக்பீல்ட் மாலில் உள்ள ஒடிஸி புத்தகக் கடையில் வாசகர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் புத்தக வாசிப்பு குறித்து உரையாற்றுகிறேன். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
இந்து தமிழ்திசை நாளிதழில் புதிய தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். வெண்ணிற நினைவுகள் என்ற இந்தத் தொடர் ஞாயிற்றுகிழமை தோறும் வெளியாகும். தமிழ் சினிமாவின் அறியப்படாத விஷயங்களை முதன்மைப்படுத்தி இந்தத் தொடரை எழுதவுள்ளேன். இந்தத் தொடரை https://www.hindutamil.in/ ஆன்லைனிலும் வாசிக்கலாம். •••
நண்பர் அருண்மொழியின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கூட எனது சிறுகதையை மையமாகக் கொண்ட நாடகம் ஒன்றை நிகழ்த்துவதாகச் சொல்லி அதைக் காணுவதற்காக அழைத்தார். வெளியூரில் இருக்கிறேன். வர இயலவில்லை என்றேன். தொலைப்பேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அருண்மொழியை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். அவர் இயக்கிய காணி நிலம், ஏர் முனை போன்ற படங்கள் நிறையத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளன. சினிமா பயிலரங்குகள் நிறைய நடத்தியிருக்கிறார். திரைப்படக் கல்லூரியில் ஆசிரியராகப் …
பொன்னீலன் 80- விழா நாகர்கோவிலில் வருகின்ற 16 நவம்பர் 2019 அன்று நடைபெறுகிறது. நான் பெரிதும் மதிக்கும் படைப்பாளி பொன்னீலன். அவர் பொதுவுடைமைச் சிந்தனையாளர் , முற்போக்கு இலக்கியத்தின் பிதாமகர். சிறந்த பேச்சாளர். பண்பாளர். ஊற்றில் மலர்ந்தது, கரிசல், கொள்ளைக்காரர்கள், தேடல், புதிய மொட்டுகள், புதிய தரிசனங்கள், மறுபக்கம் முதலிய நாவல்களை எழுதியிருக்கிறார். அடித்தள மக்களே அவரது நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். பொன்னீலன் எழுத்தில் நையாண்டியும், கேலியும் கூர்மையான அரசியல் விமர்சனமும் தனித்துவமாக வெளிப்படுகின்றன.. குமரி …
சேலத்திலுள்ள பாலம் புத்தகக் கடை சார்பில் நடைபெறும் பாலம் வாசகர் சந்திப்பில் அக்டோபர் 27 ஞாயிறு காலை 10.30 மணிக்கு எனது நாவல் ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை குறித்த அறிமுகக்கூட்டம் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளும் படி அன்புடன் அழைக்கிறேன் ••
தேசாந்திரி பதிப்பகம் எனது நூல்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. தொடர்புக்கு https://www.desanthiri.com/ தேசாந்திரி பதிப்பகம் D1,Gangai Apartments,110 Sathya garden, Saligramam Chennai, India 60093 தொலைபேசி 044 23644947 அலைபேசி 096000 34659
கேரளாவின் கொச்சியில் நடைபெறவுள்ள இலக்கிய விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன். நவம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் கொச்சியில் இருப்பேன் ••
2019 இந்து தமிழ் தீபாவளி மலரில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது