அறிவிப்பு

மோனேயின் மலர்கள்

பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனே மற்றும் ஐரோப்பிய ஒவியர்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. ஒவியங்கள் குறித்த எனது கட்டுரைத் தொகுப்புகளின் தொடர்ச்சியாக இதை எழுதியிருக்கிறேன்.  இதில் ஒவியர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படங்களையும்  அறிமுகம் செய்திருக்கிறேன். டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.

கவிதையின் கையசைப்பு

சமகால உலகக் கவிஞர்கள் குறித்து விகடன் தடம் இதழில் எழுதிய பத்தியின் தொகுப்பு.  கவிஞர் தேவதச்சனும் சமயவேலும் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இந்நூல் சமகால உலகக் கவிதைகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான வழிகாட்டி. டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.

டிசம்பர் 25

டிசம்பர் 25 புதன்கிழமை மாலை ஆறுமணிக்கு தேசாந்திரி பதிப்பகம்  சார்பில் சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வினை முன்னிட்டு இத்தாலிய இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான இதாலோ கால்வினோ (Italo Calvino) குறித்து சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன் புனைவின் புதிய சாத்தியங்களைத் தனது எழுத்துகளின் மூலம் உருவாக்கிக் காட்டியவர் கால்வினோ.   இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. கால்வினோவின் புலப்படாத நகரங்கள்  நாவல் தமிழில் சா. …

டிசம்பர் 25 Read More »

சாத்தூர் கல்லூரியில்

நேற்று சாத்தூர் எஸ்.இராமசாமி நாயுடு  கல்லூரி தமிழ்த்துறை மற்றும் தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து நடத்திய இலக்கியவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன். கல்லூரியின் முதல்வர் டாக்டர். சே.கணேஷ்ராம் அவர்கள் தலைமை உரையாற்றினார். முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு.V.அழகிரிசாமி அவர்கள் முன்னிலை வகித்து  சிறப்பாகப் பேசினார். திரு.சந்திரகாந்தன் கல்லூரி மாணவ மாணவியருக்கான கலை இலக்கியப் போட்டிகளை அறிமுகம் செய்தார் இந்த நிகழ்வினை டாக்டர் அறம் ஏற்பாடு செய்திருந்தார். அவர் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் மகன்.  தந்தையைப் …

சாத்தூர் கல்லூரியில் Read More »

சென்னையும் நானும் – 1

சென்னையும் நானும் என்ற வீடியோ தொடரின் முதற்பகுதி இன்று வெளியாகியுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இத் தொடர் வெளியாகும். தேசாந்திரி youtube சேனலில் இதைக் காணலாம் முதற்பகுதி : https://youtu.be/GFB_TvClSCQ 22/11/2019

வாசகர் சந்திப்பு

கோவை ஒடிஸி புத்தக நிறுவனம் சார்பில் நடைபெற்ற வாசகர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. புத்தகக் கடையினுள் உள்ள சிறிய இடம் என்பதால் நிறைய பேருக்கு இருக்கை போட முடியவில்லை. நின்று கொண்டே உரையைக்கேட்டார்கள். ஒரு மணி நேர உரையும் அதைத் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடலும் நடைபெற்றது. அதிகம் ஆங்கிலப் புத்தகங்களை விற்கும் ஒடிஸி போன்ற நிறுவனம்  தமிழ் புத்தகங்களுக்குத் தனிப்பிரிவு அமைத்து சிறப்பு புத்தகக் கண்காட்சி நடத்துவது பாராட்டிற்குரிய விஷயம். 21.11.2019

தேசாந்திரி YouTube சேனலில்

சென்னையும் நானும் குறித்த புதிய  முன்னோட்டம் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோத் தொடர் தேசாந்திரி YouTube  சேனலில் வெள்ளிகிழமை  தோறும் வெளியாகும். தொடரைக் காணுவதற்கு தேசாந்திரி YouTube சேனலை  subscribe செய்து கொள்ளுங்கள். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1 •• சென்னையும் நானும் முன்னோட்டம் 2 LINK https://youtu.be/s4oIeSnDSSE DESANTHIRI CHANNEL SUBSCRIPTION LINK https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1

கோவையில்

எனது புதிய நாவலான ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை குறித்த கலந்துரையாடல்  கோவையில் நடைபெறவுள்ளது. வாசக சாலை நடத்தும் இந்த நிகழ்வு  டிசம்பர் 24 ஞாயிறு  மாலை பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்