பிரான்ஸிலிருந்து வெளியாகும் கலை இலக்கிய இணையச் சிற்றிதழ் நடு – தமிழகச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது.
நடு இதழின் பிரதம ஆசிரியராக இருப்பவர் கோமகன் .
சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முகத்தைப் பிரதிபலிப்பது போன்று சிறந்த கதைகள், கட்டுரைகள். கவிதைகள் கொண்டதாக இதழ் உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது.
இணைய இதழ் சிறந்த ஓவியங்களுடன் நேர்த்தியாக வடிவமைப்புச் செய்யப்பட்டிருப்பது மிகவும் பிடித்திருக்கிறது.
நடு இதழின் ஆசிரியர் குழுவிற்க்கும் வடிவமைப்பாளருக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள்
