அறிவிப்பு

இரண்டு புத்தகங்கள்

யுவான் ருல்போ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், போர்ஹெஸ், ஆக்டோவியா பாஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கவிஞர் பிரம்மராஜன், ஆர். சிவகுமார், எதிராஜ் அகிலன், நாகார்ஜுனன், சம்யுக்தா, மணிக்கண்ணன் ஆகியோர் சிறப்பாக மொழியாக்கம் செய்து வெளியிட்ட இந்நூல் எனக்கு மிகவும் பிடித்தமானது. நவீன தமிழ் சிறுகதையை மாற்றம் செய்ததில் இந்நூலுக்கு முக்கிய பங்கிருக்கிறது. பாஸ்கரன் ஒவியத்துடன் சிறந்த வடிவமைப்பில் நேர்த்தியாக உருவாக்கபட்டிருந்தது இந்நூலை பிரம்மராஜன் மறுபதிப்பு செய்தால் இன்றைய வாசகர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். …

இரண்டு புத்தகங்கள் Read More »

திருச்சூரில்

இந்திய சினிமாவின் பெருமைக்குரிய இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மதவெறியர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதையும் அவமதிக்கப்படுவதையும் கண்டித்து ஆகஸ்ட் 7 புதன்கிழமை கேரளாவின் திருச்சூரில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். அடூர் கோபாலகிருஷ்ணன் நம் காலத்தின் மகத்தான கலைஞன்.  அவரைச் சிறுமைப்படுத்தும் விதமாக கேரளாவில் மதவெறியர்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருவதை கண்டித்துப் பேசியதுடன் தமிழ் எழுத்துலகம் அடூர்  பக்கம் நிற்கும் என்று உரையாற்றினேன். இந்நிகழ்வில் மலையாளத் திரையுலகம் மற்றும் எழுத்துலகினைச் சார்ந்த முக்கியக் கலைஞர்கள், படைப்பாளிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். …

திருச்சூரில் Read More »

ஈரோடு புத்தகத் திருவிழா

நாளை மதியம் ஈரோடு வருகிறேன். மாலை ஐந்து மணி முதல் ஈரோடு புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கில் இருப்பேன். விருப்பமான வாசகர்கள் சந்திக்கலாம். திங்கள் , செவ்வாய் இரண்டு நாட்களும் ஈரோட்டில் இருப்பேன் தேசாந்திரி அரங்கு எண் : 104 •• ஆகஸ்ட் 3 .2019

புதிய நாவல்

மதுரை புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நாவல் வெளியாகிறது ஒரு சிறிய, விடுமுறைக்காலக் காதல் கதை என்பது நாவலின் தலைப்பு. இது ஒரு காதல் கதை. கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களுக்குத் தனியழகு இருப்பது போலவே காதல் கதைகளுக்கும் தனி அழகிருக்கிறது. கோடைவிடுமுறையில் துவங்கி கோடைக்காலம் தோறும் சந்தித்துக் கொள்ளும் இருவரின் காதல் கதை. உப பாண்டவம் துவங்கி இடக்கை வரையிலான எனது நாவல்கள் யாவும் தீவிரமான கதைக்களத்தைக் கொண்டவை. நிறையக் கதாபாத்திரங்கள், கிளைக்கதைகள் என விரிபவை.ஆனால் இந்நாவல் …

புதிய நாவல் Read More »

ஈரோடு புத்தகத் திருவிழா

புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 4 ஞாயிறு மாலை ஈரோடு  வருகிறேன் மாலை 5 மணி முதல் புத்தகக் கண்காட்சியிலுள்ள தேசாந்திரி  அரங்கில் இருப்பேன். அரங்கு எண் : 104 ஆகஸ்ட் 5 மற்றும் 6 இரண்டு நாட்களிலும் ஈரோட்டில் இருப்பேன். புத்தகத் திருவிழாவில் சந்திக்கலாம் **

கறையான்

வங்காளத்தின் சிறந்த நாவலாசிரியரான சீர்ஷேந்து முகோபாத்யாய (Shirshendu Mukhopadhyay) எழுதிய கறையான் நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் மறுபதிப்பு செய்துள்ளது. தலை சிறந்த இந்திய நாவல்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது கறையான். இந்நாவலின் கதாநாயகனே நவீன இந்தியாவின் அடையாளம். அவனது செயல்கள் அதிர்ச்சியளிப்பவை. வாழ்க்கை குறித்த அவனது பார்வைகளும் மதிப்பீடுகளும் துணிச்சலானவை. அவன் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளே தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்கிறான். எண்ணவோட்டங்களாக நீளும் விவரிப்பும், நிராசையும் வேதனையும் கொண்ட அனுபவங்களும் ஒன்று சேர்ந்து கறையான் …

கறையான் Read More »

விகடன் நிகழ்ச்சி

விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தில் இந்த ஆண்டு தேர்வு பெற்ற மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு புத்தக வாசிப்பு குறித்து உரையாற்றினேன்.

அஞ்சலி

மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா மறைவுக்கு என் ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற வருடம் திருச்சூர் சென்றிருந்த போது ஆற்றூர் ரவிவர்மாவைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச்  சென்றிருந்தேன். ஆற்றூர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகுந்த பற்று  கொண்டவர். சிறந்த தமிழ் கவிதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சுந்தர ராமசாமியின் நாவலை மொழிபெயர்ப்பு செய்ததற்காக மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார்.  சமகால தமிழ் படைப்புகள் அத்தனையும் வாசித்திருக்கிறார். நான் சந்திக்கச்  சென்றிருந்த போது அவருக்கு நினைவாற்றல் …

அஞ்சலி Read More »

இரண்டு நிகழ்ச்சிகள்

நாளை 26 ஜுலை மாலை 4 : 30 மணிக்கு கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியில் இருப்பேன். தேசாந்திரி அரங்கில் சந்திக்கலாம் ஜுலை 27 சனிக்கிழமை காலை பத்துமணிக்கு பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் தேவதச்சனுக்கு சிற்பி இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் தேவதச்சன் கவிதைகள் குறித்து சிறப்புரை நிகழ்த்துகிறேன்