அழைப்பிதழ்
டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது நான்கு புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறுகிறது இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்
டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது நான்கு புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறுகிறது இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் மூன்று மெய்யியல் நாவல்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். •• நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான தாமஸ் மன் எழுதிய தி டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ் நாவலின் மொழியாக்கமே மாறிய தலைகள். இந்திய புராணத்திலுள்ள கதையைத் தனது புனைவின் வழியே உருமாற்றம் செய்திருக்கிறார் தாமஸ் மன். காளி கோவிலில் துண்டிக்கபட்ட தலை மறுஉயிர்ப்பு பெறும் போது உடல் மாறிவிடுகிறது. இதனால் ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒரு ஆணின் உடலையும் மற்றொரு ஆணின் தலையையும் நேசிக்கும் …
நாளை சென்னையில் நடைபெறும் கலை இலக்கிய விழாவில் எனது ஆங்கில நூலின் மொழியாக்கம் குறித்த கலந்துரையாடல் நடைபெறுகிறது. The Man Who Walked Backwards and Other Stories நூலின் மொழிபெயர்ப்பாளர் நீதிநாயகம் பிரபா ஸ்ரீதேவனுடன் அனில் ஸ்ரீனிவாசன் உரையாடுகிறார் இடம் : Madras School Of EconomicsGandhi Mandapam Rd, Behind Government Data Center, Surya Nagar, Kotturpuram, Chennai நேரம் : மதியம் 3 மணி. அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் …
அமெரிக்கக் கவிஞர், இயற்கையியலாளர் ரால்ப் வால்டோ எமர்சன் பற்றிச் சிறப்புரை நிகழ்த்த இருப்பதாக அறிவித்த நாளிலிருந்து பலரும் அவரைப் பற்றி ஏன் இப்போது சிறப்புரை ஆற்றுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள் இன்றைய வாசகர்கள் பலருக்கும் ரால்ப் வால்டோ எமர்சன் அறிமுகமாகியிருக்கவில்லை. அவர் 200 வருஷங்களுக்கு முற்பட்டவர். எமர்சனின் முக்கியப் படைப்புகள் தமிழில் மிகவும் குறைவாகவே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. வி.ஆர்.எம் செட்டியார் மொழியாக்கம் செய்த விதியும் தன்னம்பிக்கையும் (எமர்ஸன் கட்டுரைகள்) மற்றும் அறிமுகநூலான எமர்ஸன் சிந்தனைகள் ஜெயமோகன் மொழியாக்கம் செய்த …
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரிசல் இலக்கியத் திருவிழா டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் சிவகாசியில் நடைபெறுகிறது. கரிசல் நிலத்தின் பண்பாடு மற்றும் இலக்கியங்கள் குறித்த கருத்தரங்குகளும் நிகழ்த்துகலைகளும் இணைந்த சிறப்பான விழாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் துவக்கவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்
காஃப்காவின் அரசனின் தூதுவன் என்ற குறுங்கதையில் சாவுப்படுக்கையில் உள்ள மன்னர் ஒரு ரகசிய செய்தியை தெரிவிக்கத் தூதுவன் ஒருவனை வரவழைக்கிறார். அவனை அருகில் மண்டியிடச்செய்து காதோடு காதாகச் செய்தியைச் சொல்கிறார் அவன் தான் சொல்லியதை சரியாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறானா என மன்னர் கேட்டு உறுதிபடுத்திக் கொள்கிறார். அந்த அறையிலிருந்து தூதுவன் வெளியேறுவதற்குள் மன்னர் இறந்துவிடுகிறார். ரகசிய செய்தியோடு தூதுவன் தனது பயணத்தைத் துவங்குகிறான். அரண்மனையில் திரண்டிருந்த கூட்டத்தைத் தாண்டி வெளியேறி போக முடியவில்லை. முட்டிமோதி தனக்கான வழியை …
எனது நான்கு புதிய நூல்கள் டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்படவுள்ளன.
எனது புதிய சிறுகதைத் தொகுப்பு கவளம் டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியாகிறது. இந்த நூல் குறித்த அறிமுகவுரையை நிகழ்த்துகிறார் ப. சேரலாதன். ஜெர்மன் மொழி ஆசிரியரும், மொழிபெயர்ப்பாளருமான சேரலாதன் சென்னையில் உள்ள கதே நிறுவத்தில் பணியாற்றுகிறார்.
கவிஞர் மதாரின் புதிய கவிதைத்தொகுப்பு மாயப்பாறை வெளியீட்டு விழா டிசம்பர் 18 மாலை சென்னை அண்ணா நூலக அரங்கில் நடைபெறுகிறது. இந்த நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறேன். அழிசி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது, அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
நூல் வாசிப்பு முற்றம் சார்பாக இன்று இரவு ஏழு மணிக்கு இணைய வழியாக யாமம் நாவல் குறித்த கருத்துரை நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.