அறிவிப்பு

தி இந்து விழா

இன்று காலை நடைபெற்ற தி இந்து  லிட் பார் லைப் இலக்கியவிழாவில் கலந்து கொண்டு தமிழ் சிறுகதை குறித்து உரையாற்றினேன். மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம். அரங்கு நிரம்பிய பார்வையாளர்கள். எழுத்தாளர் ந.முத்துசாமி நிகழ்வைத் துவக்கி வைத்தார். . எனக்கு முன்பாக எழுத்தாளர் பிரபஞ்சன் சிறப்பானதொரு துவக்கவுரையை வழங்கினார். தமிழ் சிறுகதை நூற்றாண்டினைக் கொண்டாடும் தி இந்து தமிழ் நாளிதழுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

பிரெய்லி வடிவில்

தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூல் பிரெய்லி வடிவில் வெளியீடு ** தேசிய பார்வையற்றோருக்கான சங்கம் சார்பில் லூயி பிரெயிலின் 209-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகின் மிகச் சிறிய தவளை’ என்ற நூல் பிரெய்லி வடிவில் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. பார்வையற்றோர் கல்வி கற்பதற்காக ‘பிரெய்லி’ முறையைக் கண்டறிந்த லூயி பிரெய்லியின் 209-வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய …

பிரெய்லி வடிவில் Read More »

சிறுகதை நூற்றாண்டு -சிறப்புவிழா

தி இந்து தமிழ் நாளிதழ் தமிழ் சிறுகதை நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக சிறப்புவிழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நான் உரையாற்றுகிறேன். நிகழ்வினை எழுத்தாளர் ந.முத்துசாமி துவங்கி வைக்கிறார். விருதுகளை வழங்கி எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி சிறப்புரை ஆற்றுகிறார் சேத்பட்டிலுள்ள லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் விழா நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

நிகழ்ச்சிகள்

04.01.2018 மாலை பிரெயில் நூல் வெளியீட்டுவிழா – சவேரா ஹோட்டல் 05.01.2018 மாலை தமிழ்ப் பிரபாவின் நாவல்“ பேட்டை“ வெளியீட்டுவிழா – கன்னிமாரா நூலகம் 06.01.2018 மாலை 4 மணி வாசிப்பு அரங்கம் -தக்கர் பாபா தி.நகர். 06.01.2018 மாலை 6 மணி அமீன் நூல் வெளியீடு-  கவிக்கோ மன்றம்.

குறும்படமாகவுள்ள கதைகள்

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் என்ற எனது புதிய சிறுகதை தொகுப்பிலிருந்து ஓராயிரம் கைகள், வெறும் பணம் என்ற இரண்டு சிறுகதைகள் குறும்படமாக  உருவாக்கபடவுள்ளன. ஒரே நாளில் இதற்கான அனுமதி கேட்டு இரண்டு இளைஞர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் குரலில் இருந்த ஆர்வமும் தீவிரமும் சந்தோஷம் அளித்தது. பிரதீப் என்ற இளைஞர் சிறுகதை தொகுப்பு பற்றி உற்சாகமாகப் பேசினார் “இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளில் பத்துகதைகளை எளிதாகக் குறும்படமாக்கி விடலாம். எதைத் தேர்வு செய்வது எனப்புரியாமல் தடுமாறிக் …

குறும்படமாகவுள்ள கதைகள் Read More »

இவான் துர்கனேவ் பற்றி சிறப்புரை

புத்தகங்களுடன் புத்தாண்டினைக் கொண்டாடும் விதமாக டிஸ்கவரி புக் பேலஸ் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதில் இரவு 8 : 30 மணிக்கு  எனது புதிய நூலான கடவுளின் நாக்கு குறித்த அறிமுகவிழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரவு 9 :30 மணிக்கு  ரஷ்ய இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான இவான் துர்கனேவ் பற்றி சிறப்புரை வழங்கயிருக்கிறேன் ரஷ்ய இலக்கியத்தின் நாயகர்கள் பலரைப் பற்றி முன்னதாகப் பேசியிருக்கிறேன்.  துர்கனேவ் பற்றி முதன்முறையாக உரையாற்ற இருக்கிறேன். இவான் துர்கனேவின் …

இவான் துர்கனேவ் பற்றி சிறப்புரை Read More »