அறிவிப்பு

அமேசானில்

இரண்டு நாட்களுக்கு முன்பாக எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் போனில் அழைத்து அமேசானில் எனது புத்தகங்கள் கிடைக்கிறதா என விசாரித்தார். இல்லை என்றதும் நானே நேரில் வந்து மின் புத்தகமாக பதிப்பிக்க  உதவி செய்கிறேன் என்று கூறினார். சென்னைக்கு வந்த நாட்களில் இருந்து மாமல்லனுடன் பழகியிருக்கிறேன். அவரது கோபத்தைப்  போலவே அன்பும் தீவிரமானது.  மாமல்லன் சிறுகதைகளை எனக்கு மிகவும் பிடிக்கும்.  தனது விமர்சனங்களை, கருத்துகளை எவ்விதமான தயக்கமும் இன்றி நேரடியாக முன்வைப்பவர். அது பாராட்டிற்குரிய விஷயம். முன்பு டிரைவ் …

அமேசானில் Read More »

காட்சிகளுக்கு அப்பால்

தேசாந்திரி பதிப்பக வெளியீடு- 5 கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் கண்ட உலக சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு அட்டை வடிவமைப்பு ஹரிபிரசாத் •••

எழுத்தே வாழ்க்கை

தேசாந்திரி பதிப்பக வெளியீடு- 4 தி இந்து நாளிதழில் வெளியான எனது குடும்பம், நண்பர்கள், இலக்கிய வாழ்க்கை குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. அத்துடன் பல்வேறு இதழ்களில் எழுதிய எனது வாழ்க்கை குறித்த கட்டுரைகளின் தொகுப்பு அட்டை வடிவமைப்பு ஹரி பிரசாத் ••

உலகை வாசிப்போம்

தேசாந்திரி பதிப்பக வெளியீடு -3 உலக இலக்கியம் குறித்து தீராநதியில் எழுதிவந்த தொடரில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. அட்டை வடிவமைப்பு ஹரிபிரசாத்

நாவலெனும் சிம்பொனி

தேசாந்திரி பதிப்பக புதிய வெளியீடு -2 தமிழ் மற்றும் பிறமொழி நாவல்கள் குறித்த கட்டுரைகளும் இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளுக்கும் கொண்ட தொகுப்பு. அட்டை வடிவமைப்பு  : ஹரிபிரசாத்

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்

எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு. 16 சிறுகதைகள் உள்ளன. சைக்கிள் கமலத்தின் தங்கை  சிறுகதைத்தொகுப்பிற்கு பின்னால் வெளியான எனது சிறுகதைகளைக் கொண்டது எனது மகன் ஹரிபிரசாத் அட்டையை வடிவமைப்பு செய்துள்ளான். தேசாந்திரி பதிப்பகத்தின் முதல்நூலாக வெளிவருகிறது

துவக்கவிழா

நான் புதிதாக துவங்கியுள்ள தேசாந்திரி பதிப்பகத்தின் துவக்கவிழா டிசம்பர் 25 திங்கள்கிழமை மாலை ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது. இதில் எனது புதிய நூல்கள் யாவும் வெளியிடப்படவுள்ளன. இதுவரை பல்வேறு பதிப்பகங்களில் வெளியாகிவந்த எனது நூல்கள் யாவும் இனி தேசாந்திரி பதிப்பகம் மூலம் மட்டுமே வெளியாகும்.  வேறு பதிப்பகங்கள் எனது நூல்களை மறுபதிப்பு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனது புத்தகங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்கள். நண்பர்கள், புத்தக கடை உரிமையாளர்கள். ஊடகம் மற்றும் இணையதள …

துவக்கவிழா Read More »

சிங்கப்பூரில்

Singapore Writers Festival 2017 லில் கலந்து கொள்வதற்காக வெள்ளிகிழமை சிங்கப்பூர்  செல்கிறேன். மூன்று நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன் 11/11/2017 1:30 – 3:00pm The Arts House (Screening Room) இளம் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் தடைகளையும் எழுத்துலகில் அவர்களுக்குக் காத்திருக்கும் வாய்ப்புகளையும் பற்றிய குழு விவாதம் , அதை ஒருங்கிணைத்து நடத்துகிறேன் •• 12/11/2017 2:30-3:30pm The Arts House (Screening Room) அறத்திற்கு அப்பால் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியத்தில் அற இலக்கியங்களின் பங்களிப்பு …

சிங்கப்பூரில் Read More »