புதிய குறும்படம்
எனது சிறுகதையை மோகன்குமார் குறும்படமாக சிறப்பாக உருவாக்கியுள்ளார். BurraaH Tamil short film Directed By Mohankumar https://youtu.be/OqSYjR30DLU
எனது சிறுகதையை மோகன்குமார் குறும்படமாக சிறப்பாக உருவாக்கியுள்ளார். BurraaH Tamil short film Directed By Mohankumar https://youtu.be/OqSYjR30DLU
Singapore Writers Festival 2017 ல் கலந்து கொள்வதற்காக நவம்பர் 11 முதல் 13 வரை சிங்கப்பூர் வருகை தர இருக்கிறேன். இது ஒரு சர்வதேச எழுத்தாளர் விழா. இந் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுவதோடு சிங்கப்பூர் எழுத்தாளர்கள், வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்த இருக்கிறேன் சிங்கப்பூரில் உள்ள இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் என்னைச் சந்திக்கலாம். தங்குமிடம், நேரம் குறித்து அறிந்து கொள்ள மின்னஞ்சல் அனுப்பவும் writerramki@gmail.com
நவம்பர் 1 முதல் 11 வரை நடைபெறவுள்ள ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கபட்டிருக்கிறேன். உலகின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி திகழ்கிறது. இதில் 59 நாடுகள் கலந்து கொள்கின்றன. நவம்பர் 3 இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள இலக்கிய அமர்வில் கலந்து கொள்கிறேன். இதற்காக நவம்பர் 2 ல் ஷார்ஜா வருகை தருகிறேன். அங்குள்ள இலக்கிய நண்பர்கள். வாசகர்களை சந்திக்க விரும்புகிறேன். விருப்பமுள்ளவர்கள் எனது மின்னஞ்சலில் …
சிறுவர்களுக்காக நான் எழுதிய படிக்கத்தெரிந்த சிங்கம் நூலை வாசித்துவிட்டு 13 வயதான சூரியநிலவன் எழுதியுள்ள கடிதம். சிங்கப்பூரில் வசிக்கும் சூரியநிலவனுக்கும் அவனது பெற்றோர்களுக்கும் அன்பும் பாராட்டுகளுக்கும். சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு நன்றி. ••• நான் சூரியநிலவன், 13, சிங்கப்பூர். கடந்த வியாழக்கிழமை நான் நூலகத்துக்குச் சென்றிருந்தேன். எப்பொழுதும் என் அப்பா இரவல் பெறும்போது தமிழ்ப்புத்தகத்தையும் இரவல் பெறக் கூறுவார்.நானும் வேண்டாவெறுப்பாக ஒன்றை எடுத்துக்கொண்டு வருவேன். ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை.நீங்கள் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர் என்பதால் நூலக …
நீட் தேர்வு மருத்துவம் பயில நினைக்கும் ஏழை எளிய மாணவர்களின் கனவுகளை அழிக்கக்கூடிய ஒன்றாக தமிழ்நாட்டில் புகுந்துள்ளது. நாம் நீட் தேர்வை அனுமதிக்க கூடாது. அனிதாவின் மரணம் பெரும் இழப்பாகும். இதற்கு காரணமாக இருந்த மத்திய மாநில அரசுகளை வன்மையாக கண்டிக்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அனைவரும் இணைந்து போராடுவோம். நம் குரல் தமிழக மக்களின் கல்வியுரிமைக்கான ஒற்றைக்குரலாக ஒலிக்க வேண்டும்.
நேற்று திருப்பூரில் நடைபெற்ற காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழாவில் உரையாற்றினேன். மார்க்ஸ் பற்றிப் பேசப்பேச உணர்ச்சிவசம்மீறி என்னை அறியாமலே கண்ணீர் சிந்தும்படியானது. பெரும்பான்மையான உரைகளில் பேச்சை என் கட்டுக்குள் தான் வைத்திருப்பேன். இது போல சில தருணங்கள் பேச்சு இழுத்துக் கொண்டுபோய்விடுகிறது. மார்க்ஸ் பற்றிய உரைக்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மார்க்ஸின் வரலாற்றையும் தத்துவங்களையும் வாசித்தது புத்துணர்வு தருவதாகயிருந்தது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்த தோழர் ஈஸ்வரனுக்கும், தலைமை ஏற்றி நடத்திய தோழர் எஸ். ஏ.பெருமாளுக்கும். …
தேசாந்திரி பதிப்பகம் குறித்து வாழ்த்துகளையும் அன்பையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. தேசாந்திரி சார்பில் புதிய புத்தகங்கள் ஜனவரி 2018 சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்படும் பதிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. •••
ஆகஸ்ட் 13 ஞாயிறு காலை 11 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் நான் கலந்து கொண்ட இலக்கிய தர்பார் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. Ilakkiya Durbar Promo on 13-08-2017 https://youtu.be/WMNzQOrC-Mo
நாள் ஆகஸ்ட் 15 மாலை 5 மணி ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம் திருப்பூர்