அறிவிப்பு
அந்திமழை இதழில்
இம்மாத அந்திமழை இதழில் எனது கட்டுரை வெளியாகியுள்ளது 01.07.2017
விமர்சனக்கூட்டம்
ஜுலை 8 சனிக்கிழமை மாலை எனது இரண்டு நூல்களின் விமர்சனக்கூட்டம் நடைபெறவுள்ளது டிஸ்கவரி புக் பேலஸ் இதை நடத்துகிறது. நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அனைவரையும் அழைக்கிறேன் ••
லிங்கம் புகைப்படங்கள்
வேலூர் லிங்கம் பற்றி எழுதியிருந்ததை அடுத்து நண்பர்கள் பலரும் அவர் குறித்து விசாரித்தும் பாராட்டியும் வருகிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கிக்கு மலர் தூவி வழிபடுகிறார் என்பதை அறிந்து அந்த புகைப்படங்களைப் பகிர முடியுமா எனக்கேட்டிருந்தார்கள் வேலூர் லிங்கம் இல்லப் புகைப்படங்கள். புகைப்படங்கள் Harshi sabay
அஞ்சலி
கவிக்கோ அப்துல்ரகுமானின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். கல்லூரி நாட்களில் அவரது பால்வீதி படித்து வியந்து கவிஞர் மீராவின் மூலமாகக் கவிக்கோ அவர்களைச் சந்தித்துப் பழகத்துவங்கினேன். சென்னைக்கு வந்த பிறகு அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்று வருவேன். நிறையப் புத்தகங்கள். இசைநாடாக்களைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அவர் ஆசிரியராகப் பணியாற்றிய தமிழன் என்ற நாளிதழில் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். மறக்கமுடியாத நாட்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகக் குற்றாலத்தில் கவிக்கோ நடத்திய இஸ்லாமிய இலக்கியக்கருத்தரங்கிற்குச் சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தேன். அவருடன் தென்காசி …
தடம் இதழில்
இம்மாத தடம் இதழில் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் விரும்பிய செவ்வியல் இலக்கியங்கள். எழுதிய கவிதைகள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன் ••
இலக்கியப் பெட்டி
குறும்பட இயக்குனரும் சிறந்த இலக்கியவாசகருமான பவித்ரன் இலக்கியப்பெட்டி என்ற இணைய காணொளித் தொடர் ஒன்றை பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் சிறந்த புத்தங்களைத் தேர்வு செய்து அறிமுகப்படுத்துகிறார். எனது சமீபத்திய நாவல் மற்றும் கட்டுரைத் தொகுப்பை சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார். பவித்ரனுக்கு என் அன்பும் பாராட்டுகளும் இலக்கியப் பெட்டி (Literature Box ) பதின் – எஸ். ராமகிருஷ்ணன் (paththin – S Ramakrishnan) https://youtu.be/IBYY16N3RxE நிலவழி – எஸ். ராமகிருஷ்ணன்; இந்திய இலக்கிய ஆளுமைகள் https://youtu.be/VIMjy1-qThI
ஹரி பிரசாத் – குறும்படம்
எனது மகன் ஹரிபிரசாத் இயக்கியுள்ள குறும்படம் இணைப்பு https://youtu.be/gsG5ct3ITNg
காலம் எழுப்பும் கேள்வி
ஈஸ்கிலஸ் மற்றும் சோபாக்ளிஸ் எழுதிய கிரேக்கநாடகங்களை முழுமையாக மொழியாக்கம் செய்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். இவர் கோவை வானொலி நிலையத்தின் இயக்குனராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். சில காலம் சென்னை பண்பலையிலும் பணியாற்றியிருக்கிறார். கிரேக்க இலக்கியங்களை, சிந்தனைகளை வாசிப்பதற்காகத் தன் வாழ்நாளை செலவு செய்துவருபவர் ஸ்டாலின். கிரேக்க அழகியல். சிந்தனைகள், நாடகங்கள் எனப் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார். வரலாற்று மாணவரான ஸ்டாலின் தனது விருப்பத்தின் பெயரில் கிரேக்க இலக்கியங்களைத் தானே முனைந்து கற்றுக் கொள்ளத்துவங்கி இன்று …
பாராட்டுகள்
பள்ளி பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் அடிப்படையிலான ரேங்க் முறை கைவிடப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்வித்துறை வரலாற்றில் இது ஒரு மைல்கல். மிக அவசியமான மாற்றம். முதல் மதிப்பெண் பெறவைப்பதற்காகக் கோழிப்பண்ணை போலத் தனியார் பள்ளிகள் பெருகிவந்த சூழலில் இந்த மாற்றம் வரவேற்கவேண்டியது மதிப்பெண்ணைக் காட்டி மாணவர்களைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்த முறை ஒழிக்கப்பட்டது சிறப்பானது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்த பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயசந்திரன் ஐஏஎஸ் மிகுந்த பாராட்டிற்குரியவர் இவர் கல்வித்துறை செயலராகப் பதவியேற்ற …