அறிவிப்பு

புத்தாண்டு இரவு

புத்தாண்டு இரவை டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர்களுடன்  கொண்டாடினேன்.  நிறைய வாசகர்கள், நண்பர்கள் வந்திருந்தார்கள். சரியாக 12 :05க்கு எனது சிறார் நாவலான ஏழு தலை நகரத்தின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது. நான் பெரிதும் நேசிக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட  நண்பரும் இயக்குனருமான பாரதி  கிருஷ்ணகுமார் பெற்றுக் கொண்டார். சிறப்பு பிரதியை நண்பர் பால நந்தகுமார் பெற்றுக் கொண்டார். புத்தாண்டு துவங்கியதும் வெளியிடப்பட்ட முதல் புத்தகம் இதுவே என பாரதி கிருஷ்ணகுமார் மகிழ்ச்சியோடு பாராட்டினார். வாசகர் எழுத்தாளர் …

புத்தாண்டு இரவு Read More »

நன்றி

நேற்று எனது நான்கு புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். புத்தாண்டின் முதல்நாளில் இவ்வளவு பேர் திரண்டு வந்து நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்தது. மிகச்சிறப்பாக நூல்களை அச்சிட்டு கொண்டுவந்துள்ள உயிர்மை பதிப்பகத்திற்கும், நண்பர் மனுஷ்யபுத்திரன், அண்ணன் டாக்டர் வெங்கடாசலம், வேலூர் லிங்கன், ஒவியர் அமுதோன்  ஆகியோருக்கு அன்பும் நன்றியும் நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும், வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தீராத நன்றிகள் ••

குறும்பட வெளியீடு

என் மகன் ஹரிபிரசாத் அண்ணா பல்கலைகழகத்தில் மீடியா சயின்ஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறான். எடிட்டிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டவன், என்.எப்.டி.சி நடத்திய படத்தொகுப்பிற்கான சான்றிதழ் படிப்பை முடித்திருக்கிறான். தற்போது ஹரி ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளான். அவனும் நண்பர்களும் இணைந்து இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளார்கள். இக்குறும்படத்தின் வெளியீட்டு விழா  ஜனவரி 3 செவ்வாய்கிழமை மா லை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ளது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் முருகதாஸ், இயக்குனர் வசந்தபாலன், திரு சமஸ் ஆகியோர் கலந்து …

குறும்பட வெளியீடு Read More »

புதிய புத்தகங்கள்

ஜனவரி 1  ஞாயிறு 2017 மாலை கவிக்கோ அரங்கில் வெளியிடப்படவுள்ள எனது புதிய புத்தகங்கள் உயிர்மை பதிப்பகம் இந்நூல்களை வெளியிடுகிறது. நாவல் சிறுகதைத் தொகுப்பு நவீன இந்திய இலக்கியக்கட்டுரைகள் உலக சினிமா கட்டுரைகள்

ஞானபீடம்

இந்த ஆண்டு ஞானபீடம் விருது  தமிழுக்குக் கிடைக்ககூடும் என்ற தகவல் ஆறுமாதமாகவே உலவியது. அசோகமித்ரன், கி.ராஜநாராயணன் என பரிந்துரைப் பட்டியலில் மூத்த எழுத்தாளர்கள் பலரிருந்தார்கள். ஆனால் நேற்று வங்கமொழிக்கு ஞானபீடம் வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. வங்கக் கவிஞர் Shankha Ghosh இந்த ஆண்டிற்கான ஞானபீடம் பெற்றிருக்கிறார். பத்மபூஷண், சாகித்யஅகாதமி, சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளை பெற்றுள்ளவர் சங்கா கோஷ். கன்னடம் எட்டுமுறையும் வங்காளம் ஆறுமுறையும் மலையாளம் ஐந்துமுறையும் ஞானபீடம் பெற்றுள்ளது. ஆனால் ஜெயகாந்தனுக்குப் பிறகு கடந்த …

ஞானபீடம் Read More »

வாழ்த்துகள்

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள வண்ணதாசன் என்ற கல்யாணி அண்ணனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள் சிறுகதைகளுக்காக அவருக்கு விருது கிடைத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி. எத்தனையோ அபூர்வமான கதைகளை எழுதிய வண்ணதாசனுக்கு இவ்விருது தாமதமாகவே கிடைத்துள்ளது. மார்கழி சந்தோஷத்தை தரும் மாதம். இந்த மார்கழியை அண்ணனின் விருது மேலும் அழகாக்கியுள்ளது.

மனுஷ்யபுத்திரன் கவிதைகள்

கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது சமீபத்திய கவிதைகளை மூன்று தொகுதிகளாக வெளியிடுகிறார். சமகாலப்பிரச்சனைகளைத் தொட்டுப் பேசும் அவரது கவிதைகள் நம் காலத்தின் குரலாக ஒலிக்கின்றன. இந்தக் கவிதை தொகுதிகளின் வெளியீட்டுவிழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றுகிறேன் உயிர்மை பதிப்பகம் இந்நிகழ்வை நடத்துகிறது டிசம்பர் 25  மாலை 5 : 30 இடம்: கவிக்கோ மன்றம் , ஆழ்வார்பேட்டை. சென்னை

யாவரும்

யாவரும் பதிப்பகம் சார்பில் நடைபெறவுள்ள நான்கு சிறுகதைத் தொகுப்புகளின் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் இடம்:  இக்சா மையம், எக்மோர். சென்னை நாள் 23 .12.2016 .   மாலை 6 : 30