அறிவிப்பு

பதின் போஸ்டர்

எனது புதிய நாவல் பதின் ஜனவரி 1 2017  அன்று வெளியாகவுள்ளது. இதற்கு வாசகர்கள் பல்வேறு போஸ்டர்களைத் தயாரித்து அனுப்பி வருகிறார்கள் மகி என்ற வாசகர் அனுப்பிய போஸ்டர்

மாயவெளிச்சம்

இன்று காலை William Trost Richards என்ற அமெரிக்க ஒவியர் வரைந்த Moonlight On Mount Lafayette என்ற வாட்டர் கலர் ஒவியத்தை இணையத்தில் கண்டேன். நிலவொளியை எவ்வளவோ ஒவியர்கள் வரைந்திருக்கிறார்கள். ரிச்சர்ட்ஸ் வரைந்துள்ள மாயவெளிச்சம் பிரமிப்பூட்டுகிறது. இரவின் தனிமையை இதை விடச் சிறப்பாக வரைந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. கலைந்த மேகங்களுக்குள் ஒளிர்கிறது நிலா. பேரமைதி ததும்பும் நிலவெளி. வடஇந்திய ரயில் பயணம் ஒன்றில் இது போன்ற ஒரு காட்சியை நிலாவெளிச்சத்தில் கண்டிருக்கிறேன். நிமிஷ நேர …

மாயவெளிச்சம் Read More »

வாழ்த்துகள் சுகுமாரன்

இந்த ஆண்டிற்கான இயல்விருது கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.  நவீன தமிழ் கவிதையுலகின்  மகத்தான கவிக்கு இந்த விருது வழங்கப்படுவது சந்தோஷம் அளிக்கிறது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் இயல் அமைப்பிற்கும் எழுத்தாளர்  அ. முத்துலிங்கம் அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும் ••

ஏழுதலை நகரம்

சிறார்களுக்காக நான் எழுதிய ஏழுதலைநகரம் நாவல்புதிய பதிப்பாக வெளிவரவுள்ளது டிஸ்கவரி புக்பேலஸ் இதனை வெளியிடுகிறது

குற்றத்தின் கண்கள்

உலக சினிமா குறித்த எனது புதிய கட்டுரைத் தொகுப்பு குற்றத்தின் கண்கள் உயிர்மை பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. இந்நூல் ஜனவரி 1  சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு கவிக்கோ அரங்கில் வெளியிடப்படுகிறது

புதிய சிறுகதைத்தொகுப்பு

எனது புதிய சிறுகதைத்தொகுப்பு சைக்கிள் கமலத்தின் தங்கை உயிர்மை பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. இருபது கதைகள் கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பு ஜனவரி 1 2017  சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு கவிக்கோ அரங்கில் வெளியிடப்படுகிறது

மனுஷ்யபுத்திரன் கவிதைகள்

மனுஷ்ய புத்திரன் எழுதிய 460 கவிதைகள் மூன்று பெரும் தொகுதிகளாக வரும் டிசம்பர் 25 வெளிவர இருக்கின்றன. அதற்கான முன்வெளியிட்டு திட்டம் அறிவிக்கபட்டுள்ளது 1. இருளில் நகரும் யானை 2. காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன் 3. தித்திக்காதே………. மொத்தம் 460 கவிதைகள்/ 800 பக்கங்கள்/ கெட்டி அட்டைப் பதிப்பு  ரூ 900. சிறப்பு விலை ரூ 600 …………………… முன்பதிவு செய்ய பணம் செலுத்தும் முறைகள் ……………………… 1. உயிர்மை இணையதளத்திற்கு கீழ்கண்ட சுட்டியில் சென்று …

மனுஷ்யபுத்திரன் கவிதைகள் Read More »

ஹரியின் குறும்படம்

என் மகன் ஹரிபிரசாத் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளான். அண்ணா பல்கலைகழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா நான்காம் ஆண்டு பயிலும் அவனும் நண்பர்களும் இணைந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் வெளியீட்டுவிழா விரைவில் நடைபெறவுள்ளது. https://www.facebook.com/Light-Angle-Production-1252450254829358/?hc_ref=NEWSFEED