பத்தே நிமிடங்கள் நிகழ்த்தப்படும் குறு நாடகங்களை ஊக்கபடுத்துவதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது ஷார்ட் பிளஸ் ஸ்வீட் அமைப்பு.சிறந்த நாடகங்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகள் வழங்கி உலக அளவில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்.
இவர்களின் நாடகவிழா சென்னை அல்லையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடைபெற உள்ளது.
இதில் 30க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் கலந்து கொள்கின்றன.
ஜூலை 6 லிருந்து – 23 வரை இந்நாடக விழா நடைபெறுகிறது.
27,29.30,31 தேதிகளில் இதன் இறுதிச் சுற்று நடைபெறுகிறது
இந்த நாடகவிழாவில் அதிகம் இனிப்பு என்ற எனது சிறுகதையை நடிகரும், நாடக இயக்குனருமான மணிபாரதி நாடமாக்கியிருக்கிறார்.
விசுவாசம் என்ற குறும்படத்தை இயக்கி பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்
ஜுலை 21,22, 23,24 ஆகிய தேதிகளில் மாலை 6 30 மணிக்கு நாடகம் நடைபெற உள்ளது.
அனைவரும் இதில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
••



