பதின்
எனது புதிய நாவல் பதின் – ஜனவரி 1 – 2017 மாலை வெளியிடப்படவுள்ளது. உயிர்மை பதிப்பகம் இந்நாவலை வெளியிடுகிறது விழா நடைபெறுமிடம் : கவிக்கோ மன்றம் மாலை 6 மணி ••
எனது புதிய நாவல் பதின் – ஜனவரி 1 – 2017 மாலை வெளியிடப்படவுள்ளது. உயிர்மை பதிப்பகம் இந்நாவலை வெளியிடுகிறது விழா நடைபெறுமிடம் : கவிக்கோ மன்றம் மாலை 6 மணி ••
நாளை (23 .11.2016 ) தஞ்சை பல்கலைகழகத்தில் சாகித்ய அகாதமி நடத்தும் தமிழ் இலக்கியத் திறனாய்வு, கோட்பாடுகளும் அணுகுமுறைகளும் : மரபும் புதுமையும் கருத்தரங்கில் கலந்து கொண்டு மையக்கருத்துரையாற்றுகிறேன் நிகழ்வு நடைபெறுமிடம் :பேரவைக்கூடம் தமிழ்ப்பல்கலைகழகம் நேரம் : காலை 10 மணி இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வை தஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத்தின் இலக்கியத்துறை இணைந்து நடத்துகிறது.
வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப்பேரகராதி ஐந்து தொகுதிகளை வாங்கினேன். வரலாற்று முறை அகராதி என்பது ஒரு சொல் தமிழ் இலக்கியத்தில் எந்தெந்த இடங்களில் இடம்பெற்றிருக்கிறது. என்ன பொருளைச் சுட்டுகிறது . அச்சொல்லை உரையாசிரியர்கள் எப்படி விளக்குகிறார்கள். சொல் அடைந்துள்ள மாற்றங்கள் எவை என விளக்கும் அகராதியாகும். இந்த இலக்கியப் பேரகராதியில் 131 இலக்கியங்கள், 70814 வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் பேரறிஞர்களின் நாற்பது ஆண்டு கால கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த அகராதி தற்போது 50% தள்ளுபடி விலையில் …
இம்மாத விகடன் தடத்தில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது
கிழக்கும் மேற்கும் என்ற ஒலியேட்டில் எனது சிறுகதை “ கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது ” இடம் பெற்றுள்ளது. சிறப்பாக ஒலிவடிவம் தந்துள்ள ஞானா பாலகிருஷ்ணனுக்குப் பாராட்டுகள் •• ஆசிட் வீச்சில் முகம் சிதைந்து போன பெண்ணின் அவலத்தைச் சொல்லும் கதையிது •• கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது in an audio form: https://soundcloud.com/eastandwest-503731323/oct-2016
சென்னை IIT தமிழ் மன்றம் சார்பாக நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நவம்பர் 3 வியாழன் மாலை 5 30 மணிக்கு உரையாற்றுகிறேன்
எழுத்தாளர் அழகிய சிங்கர் நவீன விருட்சம் என்ற இலக்கிய இதழை கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திவருகிறார். இலக்கிய இதழ் ஒன்றை நடத்துவது எளிதான விஷயமில்லை. பொருளாதார ரீதியாக அது பெரும் சுமை. படைப்புகள் கிடைப்பதும் எளிதில்லை. ஆனால் தனது இலக்கிய ஈடுபாட்டின் காரணமாக விருட்சத்தை சிறப்பாக நடத்திவருகிறார் சமீபத்தில் நவீன விருட்சம் 100 வது இதழ் வெளியாகியுள்ளது அழகியசிங்கருக்கு என் மனம் நிரம்பிய பாரட்டுகள் இதன் வெளியீட்டுவிழா அக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு …
கவிஞர் ஞானக்கூத்தன் நினைவாக சைக்கிள் கமலத்தின் தங்கை என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறேன். இம்மாத உயிர்மை இதழில் கதை வெளியாகியுள்ளது. ஒரு வாரத்திற்குள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கதையைப் பாராட்டித் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் உற்சாகப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. கதையை உயிர்மைக்கு அனுப்பிய இரவு மனுஷ்யபுத்திரன் தொலைபேசியில் அழைத்து இது மிக முக்கியமான கதை என தனது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். சிறுகதை ஒன்று உயிர்மையின் அட்டையில் விளம்பரப்படுத்தபட்டிருப்பது இதுவே முதல்முறை. கதைக்கு அரஸ் சிறப்பான ஒவியங்களை வரைந்துள்ளார். கதையைப் பாராட்டி …
என்நண்பரும் எழுத்தாளருமான தமிழ்மகன் மின்னங்காடி டாட் காம் என இணைய நூல்விற்பனையகம் ஒன்றைத் துவக்கியிருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் தமிழின் அனைத்துப் பதிப்பக நூல்களும் மின்னங்காடியில் கிடைக்கும். இந்தியாவுக்குள் என்றால் ஐந்து தினங்களுக்குள்ளும் வெளிநாடுகள் என்றால் பதினைந்து தினங்களுக்குள்ளும் நூல்களைச் சேர்ப்பிக்கப்படும். கார்டுகள் மூலமாகப் பணம் செலுத்திப் புத்தகங்களை வாங்க முடியும். இந்தியாவுக்குள் என்றால் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பி நூல்களைப் பெறலாம். காசோலை, மணியார்டர் செலுத்தி மட்டுமே புத்தகம் பெற …
மதுரை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எனது நான்கு புதிய புத்தகங்கள் வெளியாகின்றன. இவற்றை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது அமெரிக்கா, மற்றும் ஜப்பானிய பயண அனுபவத்தைப் பற்றிய நூல் நிலம் கேட்டது கடல் சொன்னது. சிறார்களுக்கான சிறுநாவல் வரிசையில் மூன்று புத்தகங்கள் வெளியாகின்றன. 1.நிலம் கேட்டது கடல் சொன்னது ரூ.70 2. பூனையின் மனைவி ரூ.35 3. உலகின் மிகச்சிறிய தவளை ரூ.40 4. இறக்கை விரிக்கும் மரம் ரூ.40 185 ரூபாய் மதிப்புள்ள இந்த நான்கு …