விருட்சம் 100

எழுத்தாளர் அழகிய சிங்கர்  நவீன விருட்சம் என்ற இலக்கிய இதழை கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

இலக்கிய இதழ் ஒன்றை நடத்துவது எளிதான விஷயமில்லை. பொருளாதார ரீதியாக அது பெரும் சுமை. படைப்புகள் கிடைப்பதும் எளிதில்லை. ஆனால் தனது இலக்கிய ஈடுபாட்டின் காரணமாக  விருட்சத்தை சிறப்பாக நடத்திவருகிறார்

சமீபத்தில் நவீன விருட்சம் 100 வது இதழ் வெளியாகியுள்ளது

அழகியசிங்கருக்கு என் மனம் நிரம்பிய பாரட்டுகள்

இதன் வெளியீட்டுவிழா அக்டோபர் 23  ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேற்கு மாம்பலம் மகாதேவன் தெருவில் உள்ள காமாட்சி மினி ஹாலில் நடைபெறவுள்ளது

100வது இதழை அசோகமித்ரன் வெளியிட நான் பெற்றுக்கொள்கிறேன்

இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

0Shares
0