தமிழ் இலக்கியப்பேரகராதி

வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப்பேரகராதி  ஐந்து தொகுதிகளை வாங்கினேன்.

வரலாற்று முறை அகராதி  என்பது ஒரு சொல் தமிழ் இலக்கியத்தில் எந்தெந்த இடங்களில் இடம்பெற்றிருக்கிறது.  என்ன பொருளைச் சுட்டுகிறது . அச்சொல்லை உரையாசிரியர்கள் எப்படி விளக்குகிறார்கள். சொல் அடைந்துள்ள மாற்றங்கள் எவை என விளக்கும் அகராதியாகும்.    இந்த இலக்கியப் பேரகராதியில் 131 இலக்கியங்கள், 70814 வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.  தமிழ் பேரறிஞர்களின் நாற்பது ஆண்டு கால கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த அகராதி தற்போது 50% தள்ளுபடி
விலையில் கிடைக்கிறது.
பழந்தமிழ் இலக்கியங்களுக்கு முறையான பதிப்புகள் வெளியிட வேண்டுமென்று ‘சாந்தி சாதனா’ அறக்கட்டளையைத் தொடங்கினார் மர்ரே-ராஜம்.
தமிழ்ப்பதிப்பு வரலாற்றில் மர்ரே நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானது.

வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப்பேரகராதி  எழுத்தாளர்களுக்கும் இலக்கியவாசகர்களுக்கும் பெரிதும் பயனுள்ள நூல். அவசியம் வாங்குங்கள்.

சாந்தி சாதனா’. வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி

(5 தொகுதிகள் சேர்த்து)   Rs.4,270.00

0Shares
0