ஒளியை நேசித்தவன்
என் நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற கேமிராமேனுமான ஜீவா இறந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் கட்டுரை ஒன்றினை குமுதம் லைப் ( 31. 08. 2016 ) இணைப்பில் எழுதியிருக்கிறேன்
என் நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற கேமிராமேனுமான ஜீவா இறந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் கட்டுரை ஒன்றினை குமுதம் லைப் ( 31. 08. 2016 ) இணைப்பில் எழுதியிருக்கிறேன்
நான் எழுதிய செகாவ் வாழ்கிறார் என ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்று நூல் ருஷ்ய மொழியில் வெளியாக இருக்கிறது. தமிழில் எழுதப்பட்ட ஒரு ரஷ்ய எழுத்தாளரைப் பற்றிய நூல் ருஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை. ஆன்டன் செகாவை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூலிது. இதனை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ 150.
தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு இயல் இலக்கியச் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். இந்நிகழ்வில் கவிஞர் மனுஷ்யபுத்திரன். பிரசன்னா ராமசாமி, விமலாதித்த மாமல்லன், சரவணன் சந்திரன், பேராசிரியர் பஞ்சாங்கம், புதுவை சீனுதமிழ்மணி, பேராசியர் வெங்கடசுப்பராய நாயகர், பாஸ்கர் சக்தி, வேடியப்பன், பிருந்தாசாரதி, ஆடிட்டர் சந்திரசேகர், கி.ராவின் மகன் பிரபி, அவரது மனைவி நாச்சியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள் இயல் சிறப்பு விருதிற்குக் காரணமாக இருந்த எழுத்தாளர் …
கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனுக்கு கனடா இலக்கியத் தோட்டத்தின் இலக்கியச்சாதனை சிறப்பு விருது வழங்கும் விழா வருகின்ற 27 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஆழ்வார்பேட்டையிலுள்ள கவிக்கோ அரங்கில் நடைபெறவுள்ளது. தி இந்து நாளிதழ் விழாவை ஒருங்கிணைத்து நடத்துகிறது. இவ்விழாவில் கிராவின் படைப்புலகம் குறித்து நான் உரையாற்றுகிறேன். விழாவில்அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
குவிகம் இலக்கிய வாசல் மாதந்தோறும் நடத்தி வரும் இலக்கியச்சந்திப்பு நிகழ்வில் ஆகஸ்ட் 20 சனிக்கிழமை நான் உரையாற்றுகிறேன், நிகழ்ச்சி டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் மாலை 6 : 30 மணிக்கு நடைபெறுகிறது
ஜெயராவ் இயக்கத்தில் நான் எழுதிய தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் என்ற நாடகத்தை இன்று இரவு 7 : 30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடகமது. தமிழ் தொலைக்காட்சி ஒன்று தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை குறித்த நாடகம் ஒன்றை ஒளிபரப்பு செய்வது இதுவே முதல்முறை. மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றிகள்
கவிஞர், நா.முத்துக்குமார் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அருமை நண்பனை நினைத்து அடக்கமுடியாமல் கண்ணீர் பீறிடுகிறது. என் அஞ்சலியையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்
கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இலக்கியச் சாதனை சிறப்பு விருது 2016 வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் மற்றும் தேர்வுக் குழுவினர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். தமிழ் இலக்கியச் சாதனை 2016 விருதுக் கேடயமும், ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. விருது விழா சென்னை, கவிக்கோ மன்றத்தில் 27 ஆகஸ்டு 2016 சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது. கனடா …
மதுரையில் ஆகஸ்ட் 13 மாலை நடைபெறுவதாக இருந்த இடக்கை நாவலுக்கான விமர்சன அரங்கம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை புத்தகக் கண்காட்சியைஒட்டி செப்டம்பர் முதல்வாரம் இந்த நிகழ்வு நடைபெறும். ••
ஈரோடு புத்தகத் திருவிழாவில் செவ்வாய்கிழமை( 09 .08.2016 ) உரையாற்றினேன். பெரும்திரளான கூட்டம். புத்தகக் கண்காட்சியை மிகச்சிறப்பாக ஸ்டாலின் குணசேகரன் ஏற்பாடு செய்துள்ளார். காலையில் நண்பர்களை சந்தித்து அறையில் உரையாடிக் கொண்டிருந்தேன். மதியம் வேடியப்பன் மற்றும் அண்ணன் அறிவுமதியோடு ஐயப்பா மெஸ்ஸிற்கு சாப்பிடச் சென்றேன். அறைக்குத் திரும்புவதற்குள் நான்கு இளைஞர்கள் கோவையில் இருந்து வந்து காண்பதற்காக நின்றிருந்தார்கள். அவர்களுடன் புத்தக கண்காட்சியினுள் சென்று அரங்கினைப் பார்வையிட்டேன். ஈரோடு சிந்தனைப் பேரவையின் தன்னார்வத் தொண்டர்கள் மிகுந்த பாராட்டிற்குரியவர்கள். காலை ரயில் …