மலையாளத்தில்
என்னுடைய சிறுகதை ஒன்றை shafi cherumavilayi மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். Prabhatha Rashmi இதழில் வெளியாகியுள்ளது. சஃபிக்கு மனம் நிரம்பிய நன்றி. ••
என்னுடைய சிறுகதை ஒன்றை shafi cherumavilayi மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். Prabhatha Rashmi இதழில் வெளியாகியுள்ளது. சஃபிக்கு மனம் நிரம்பிய நன்றி. ••
இடக்கை நாவலுக்கான விமர்சன அரங்கினைக் கடவு இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது மதுரையில் ஆகஸ்ட் 13 மாலை நார்த்கேட் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
ஈரோடு புத்தக கண்காட்சியில் ஆகஸ்ட் 9 செவ்வாய்கிழமை மாலை உரையாற்றுகிறேன்
நவீன தமிழ் கவிதையுலகின் பெருங்கவி ஞானக்கூத்தன் இன்று மறைந்தார். சங்க கவிதைமரபின் தொடர்ச்சியிலிருந்து புதிய நவீன கவிதையை உருவாக்கிச் சாதனை செய்த மகத்தான கவிஞர் ஞானக்கூத்தன். அவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்கு பேரிழப்பாகும் . ஞானக்கூத்தனின் மறைவிற்கு மனம் நெகிழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்தே நிமிடங்கள் நிகழ்த்தப்படும் குறு நாடகங்களை ஊக்கபடுத்துவதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது ஷார்ட் பிளஸ் ஸ்வீட் அமைப்பு.சிறந்த நாடகங்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகள் வழங்கி உலக அளவில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். இவர்களின் நாடகவிழா சென்னை அல்லையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடைபெற உள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் கலந்து கொள்கின்றன. ஜூலை 6 லிருந்து – 23 வரை இந்நாடக விழா நடைபெறுகிறது. 27,29.30,31 தேதிகளில் இதன் இறுதிச் சுற்று நடைபெறுகிறது இந்த …
நாளை ( 17. 07.2016 ) சேலத்தில் பாலம் புத்தகக் கடை நடத்தும் வாசகர் சந்திப்பு நிகழ்வில் இடக்கை நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நடைபெறுகிறது இடக்கை நாவல் குறித்து ஜி. செல்வா உரையாற்றுகிறார். இடம் : பாலம் புத்தகக்கடை 35, அத்வைத ஆசிரம சாலை (புதிய பேருந்து நிலையல் எதிரில்) சேலம்- 4 நேரம் : காலை 11 மணி ••
இன்று மாலை கும்பகோணத்தில் எனது இடக்கை நாவல் குறித்து நண்பரும் வழக்கறிஞருமான மணிசெந்தில் உரையாற்றுகிறார். பொன்னி இலக்கியச்சுற்றம் இதனை ஏற்பாடு செய்துள்ளது இடம் : புனித பீட்டர்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி பழைய பாலக்கரை, கும்பகோணம். நேரம் : மாலை 5 மணி ••
இந்த வாரம் குமுதம் இதழோடு இணைப்பாக வந்துள்ள குமுதம் லைப்பில் இசைஞானி இளையராஜா இசையில் நான் எழுதிய பாடல் பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறேன். நேற்றிலிருந்து ஏகப்பட்ட வாழ்த்துச் செய்திகள். போனிலும் மெயிலிலும் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நண்பர் சுகாவின் படித்துறை படத்திற்காக எழுதப்பட்ட அப்பாடல் இன்னமும் வெளியாகவில்லை. பாடல் எழுதக் காரணமாகயிருந்த இசைஞானிக்கும் சுகாவிற்கும் தீராத நன்றிகள். நன்றி : குமுதம் ••
இந்த மாதம் முதல் தீராநதியில் எழுத்தாளர்கள் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி ஒரு பத்தி எழுதுகிறேன்