அறிவிப்பு

புக் மார்க்

புத்தகம் படிப்பவர்களுக்கு உதவும் விதமாக டிஸ்கவரி புக் பேலஸ் எனது படைப்புகளிலிருந்து தேர்வு செய்த வரிகளைக் கொண்ட  புக் மார்க்குகளை வெளியிட்டுள்ளது. இதனைச் சிறப்பாக வடிவமைப்பு செய்திருப்பவர் கவிஞர் நரன். நன்றி வேடியப்பன்.நன்றி நரன். தேவைப்படுகிறவர்கள் சென்னை புத்தகக் கண்காட்சியிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம் ••

ஆங்கிலத்தில்

எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் The Two Bubbles என்ற தலைப்பில்  வெளியாகியுள்ளது. கதைகளை மொழிபெயர்த்திருப்பவர் பேராசிரியர் P. ராம்கோபால். IUP  இதனை வெளியிட்டுள்ளது. இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் Leftword, மற்றும் பாரதி புத்தகாலயம் அரங்கில் விற்பனைக்கு கிடைக்கிறது. விலை ரூ 200.

இடக்கை புதிய பதிப்பு

இடக்கை நாவலின் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதிப்பை உயிர்மை பதிப்பகம் வெகுசிறப்பாக  வெளியிட்டுள்ளது. இந்நாவல் குறித்து இதுவரை பதினாறு விரிவான விமர்சனக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்நாவலின் ஹிந்தி மொழியாக்கம் தற்போது நடைபெற்றுவருகிறது.

உயிர்மை

புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகத்தில் எனது நூல்கள் கிடைக்கின்றன பதின் புதிய நாவல் சைக்கிள் கமலத்தின் தங்கை  / புதிய சிறுகதைத்தொகுப்பு இடக்கை நாவலின் புதிய பதிப்பு

காணொளி

shruti.tv யை நடத்தி வரும் நண்பர் கபிலன் எனது இலக்கியநிகழ்ச்சிகள் அத்தனையும் முழுமையாகப் பதிவு செய்து முறையாக எடிட் செய்து இணையத்தில் பதிவேற்றம்  செய்துவருகிறார். அர்ப்பணிப்பு மிக்க இந்த செயலுக்காக அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள் காணொளி இணைப்புகள் பால்யத்தை எழுதுதல் – எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை https://www.youtube.com/watch?v=vAmXhnsDd_E உயிர்மை வழங்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் 4 நூல்கள் வெளியீட்டு விழாவில் முனைவர் சா. பாலுச்சாமி உரை https://www.youtube.com/watch?v=ZtI8sXe_kE4 உயிர்மை வழங்கும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘குற்றத்தின் கண்கள்’ நூல் …

காணொளி Read More »