ராஜஸ்தான் பயணம்
பிப்ரவரி இறுதியில் ஒரு வாரம் ராஜஸ்தான் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அங்கே சிறிய உதவி தேவைப்படுகிறது ராஜஸ்தானில் வசிக்கும் இலக்கிய நண்பர்கள், வாசகர்கள் தொடர்பு கொள்ளவும். எனது மின்னஞ்சல் writerramki@gmail.com
பிப்ரவரி இறுதியில் ஒரு வாரம் ராஜஸ்தான் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அங்கே சிறிய உதவி தேவைப்படுகிறது ராஜஸ்தானில் வசிக்கும் இலக்கிய நண்பர்கள், வாசகர்கள் தொடர்பு கொள்ளவும். எனது மின்னஞ்சல் writerramki@gmail.com
பதின் நாவலுக்கான அறிமுகக்கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது களம் இலக்கிய அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது 29. 01.2017 ஞாயிறு மாலை 5 :30 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அஜந்தா ஹோட்டல் அரங்கில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது இதில் இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்
27.01.2017 வெள்ளிகிழமை மாலை 6 மணிக்கு பெரம்பலூர் புத்தக கண்காட்சியில் உலகை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறன்
எனது சிறுகதை பிழைதிருத்துபவனின் மனைவி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு இம்மாத பிரண்ட்லைன் இதழில் வெளியாகியுள்ளது. திலீப்குமார் தொகுத்த The Tamil Short Story: Through the Times, Through the Tides (Ed. Dilip Kumar; translated by Subashree Krishnaswamy) தொகுப்பிலிருந்து இக்கதை மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது Translation of the Tamil short story Pizhai Thirutthubavanin Manaivi by S. Ramakrishnan. https://www.frontline.in/arts-and-culture/literature/the-proofreaders-wife/article9473926.ece?homepage=true நன்றி : விஜயசங்கர் பிரண்ட்லைன் திலீப்குமார்
நேற்று கே.கே.நகர் சிவன் பார்க்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டம் https://www.facebook.com/shrutiwebtv/videos/826535620820631/ நன்றி ஸ்ருதிடிவி வேடியப்பன்
தமிழகம் காணாத அளவில் எழுந்துள்ள மாணவர் எழுச்சியை ஆதரிப்போம். இது ஒரு அடையாளப் போராட்டம். ஜல்லிகட்டு இதன் குவிமையம் என்ற போதும் மாணவர்களின் சமூக அக்கறைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அமைதியான முறையில் வீதியில் இறங்கிப் போராடிய வரும் இளைய சமுதாயத்தை வாழ்த்துவோம். அவர்கள் நம் அனைவரின் உரிமைகளுக்காகவுமே களம் இறங்கி உள்ளார்கள். ஆகவே அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும் உடனிருந்து ஆதரவு தருவதும் நமது கடமை. இது குறித்துப் புதிய தலைமுறை நேர்படப்பேசு நிகழ்வில் நான் பேசியதன்காணொளி …
Graphic Artist பூபதியை நேற்று புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன். இவர் கலைவிமர்சகரான தேனுகாவின் பையன். மறைந்த கலைவிமர்சகர் தேனுகாவுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அற்புதமான மனிதர். பூபதியைப் பார்த்த மாத்திரம் மனதில் தேனுகாவின் மலர்ந்த சிரிப்பும் வாஞ்சையும் பீறிட்டது. பூபதி அகமதாபாத்திலுள்ள NIDயில் Graphic Design படித்து முடித்துவிட்டு தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார். தனது கவிதை மற்றும் சிறுகதைகளை ஒவியத்துடன் சிறிய கிராபிக் புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். தனது இணையப்பக்கத்தில் இவற்றைத் தரவிறக்கம் செய்து கொள்ளும்படியாகவும் வைத்திருக்கிறார் பூபதி. …
என் ப்ரியத்துக்குரிய வானவன் மாதேவி இன்று காலை 11 30 மணிக்கு சேலத்தில் காலமானார் . தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாகச் சிகிட்சை பெற்று வந்த போதும் பலருக்கும் தன்னம்பிக்கையூட்டும் பெண்ணாக இருந்தவர் வானவன் மாதேவி. அவரைப் போல நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் அரிய சேவைகளைச் செய்திருக்கிறார். தன் உடற்சிரமத்தைப் பொருட்படுத்தாமல் தேடித்தேடி படித்தவர், மிகுந்த சமூக அக்கறை கொண்டவர். அவரது மறைவு பெருந்துயரமாக மனதை அழுத்துகிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் வல்லபிக்கும் எனது …
அன்பிற்குரிய தோழர் எஸ். ஏ.பி எழுதியுள்ள சிறுகுறிப்பு •• பதின் நாவல் படித்தேன் ……. ……….. …………… Sap Marx எஸ்ரா எழுதிய புதியநாவலான பதின் அருமையாக வந்துள்ளது. பதின் என்றால் பத்து.ஒரு பதின் வயதுச்சிறுவனின் வாழ்வு.. அவனது சிறுவயது அனுபவங்கள் சுவைபடப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு சிறு வயது நினைவுகள்மட்டும் மரணம்வரை மறப்பதில்லை. இது தனியொருவனின் கதையல்ல.இதில் வரும் நான் என்ற சொல் என்னைக் குறிக்கவில்லை…நம்மைக்குறிக்கிறது என்கிறார் எஸ்ரா. சிறுவயது அனுபவங்கள் வாசிக்கும் நம்மை நமது …