அறிவிப்பு

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான எழுத்தாளர் அசோகமித்ரன் இன்று (23.03.2017 ) காலமானார். சென்னை நகரின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்ததில் அவருக்கு நிகர் எவருமில்லை. சினிமாவின் மறுபக்கம் பற்றி அவர் எழுதிய கரைந்த நிழல்கள் நாவல் தமிழின் மகத்தான படைப்பு. ஒற்றன், தண்ணீர், மானசரோவர் எனத் தனது முக்கிய நாவல்களின் வழியே தமிழ் புனைவெழுத்தின் உச்சங்களை அவர் படைத்துக் காட்டியுள்ளார். கணையாழியில் அவர் ஆசிரியராக இருந்த நாட்களில் நான் எழுதத் துவங்கினேன். எனது முதல்கதையைத் தேர்வு …

அஞ்சலி Read More »

செங்கல்பட்டில்

மார்ச் 11 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு செங்கை பாரதியார் மன்றம் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இடம்  : ஹோட்டல் கணேஷ் பவன் செங்கல்பட்டு நாள் : 11.03.2017 மாலை 5 மணி தலைப்பு  :  கற்றுத்தரும் கதைகள்

பதின் கலந்துரையாடல்

ஞாயிறு மாலை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்ற பதின் நாவலுக்கான கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றது.  கலந்து சிறப்பித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள். வாசகர்களுக்கு நன்றி. ஒருங்கிணைப்பு செய்த வேடியப்பனுக்கும், டிஸ்கவரி புக் பேலஸ் வாசகவட்டத்திற்கும் அன்பும் நன்றியும் நிகழ்வை ஸ்ருதிடிவி முழுமையாகப் பதிவு செய்துள்ளது. நண்பர் கபிலனுக்கு நன்றி. நிகழ்வின் காணொளிகள் அனைத்தும் ஒரே சுட்டியில் https://www.shruti.tv/?p=10678

பதின் மதிப்புரை

இம்மாத செம்மலர் இதழில் தோழர் எஸ்.ஏ.பி பதின் நாவல் குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார் நன்றி  : செம்மலர் எஸ். ஏ. பெருமாள்

பதின் கலந்துரையாடல்

பிப்ரவரி 12 ஞாயிறு மாலை 6 மணிக்கு  டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் எனது பதின் நாவல் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன் நிகழ்வினை டிஸ்கவரி வாசகவட்டம் ஒருங்கிணைப்பு செய்துள்ளது

அஞ்சலி

எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் இன்று காலமாகிவிட்டார். சிவக்குமாரை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். நல்ல எழுத்தாளன். வேடிக்கையாகப் பேசக்கூடியவன். அவனது மறைவு ஆறாத் துயரை உருவாக்குகிறது. எனது கண்ணீர் அஞ்சலிகள்