ஞானபீடம்

இந்த ஆண்டு ஞானபீடம் விருது  தமிழுக்குக் கிடைக்ககூடும் என்ற தகவல் ஆறுமாதமாகவே உலவியது. அசோகமித்ரன், கி.ராஜநாராயணன் என பரிந்துரைப் பட்டியலில் மூத்த எழுத்தாளர்கள் பலரிருந்தார்கள். ஆனால் நேற்று வங்கமொழிக்கு ஞானபீடம் வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

வங்கக் கவிஞர் Shankha Ghosh இந்த ஆண்டிற்கான ஞானபீடம் பெற்றிருக்கிறார். பத்மபூஷண், சாகித்யஅகாதமி, சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளை பெற்றுள்ளவர் சங்கா கோஷ்.

கன்னடம் எட்டுமுறையும் வங்காளம் ஆறுமுறையும் மலையாளம் ஐந்துமுறையும் ஞானபீடம் பெற்றுள்ளது. ஆனால் ஜெயகாந்தனுக்குப் பிறகு கடந்த 12 ஆண்டுகளாக ஞானபீடம் தமிழில் ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை.

தேசிய அளவில் தமிழ் புறக்கணிக்கபடுவதன் அடையாளமாகவே இதைக் காண்கிறேன்.

**

0Shares
0