பொங்கல் புத்தகத் திருவிழா
சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா ராயப்பேட்டை YMCA மைதானத்தில் ஜனவரி 13ல் துவங்குகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் ஜனவரி 16 மாலை 6 மணிக்கு வீடில்லாப்புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்
சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா ராயப்பேட்டை YMCA மைதானத்தில் ஜனவரி 13ல் துவங்குகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் ஜனவரி 16 மாலை 6 மணிக்கு வீடில்லாப்புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய எழுத்தாளனின் சித்திரம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் கர்ணனைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனப் பலரும் போனிலும் மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டார்கள்.அவரது முகவரி. திரு. கர்ணன் 37, சுயராஜ்யபுரம் 4 வது தெரு செல்லூர். மதுரை – 2 தொலைபேசி. 9487950844 •• விருப்பமானவர்கள் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்
தி இந்து ஆங்கில நாளிதழ் நடத்தும் இலக்கியவிழாவில் ஜனவரி 15 அன்று நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்து கொள்கிறேன். இந்த விழா ஜனவரி 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் சென்னை சேத்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாக அரங்கில் நடைபெறுகிறது. The Hindu Lit For Life January 15 .THE HINDU PAVILION 12.05 pm – 12.55 pm Aham, Puram: Impact of urbanisation and industrialisation as reflected in Tamil …
“வாசகசாலை”முகநூல் குழுமம், புத்தக வாசிப்பினை மேம்படுத்தும் விதமாக கடந்த ஒராண்டு காலமாக மாதம் ஒருமுறை ஒரு புத்தகம் பற்றிய கலந்துரையாடலையும், மூத்தபடைப்பாளிகளை கொண்டாடும் விதமாக ஆய்வரங்குகளையும் ஏற்பாடு செய்து வருகிறது. வாசகசாலை அமைப்பின் முதலாமாண்டு நிறைவு ஜனவரி, 9 ம்தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு 2015-ல் வெளியான படைப்புகளில் சிறந்த நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து விருது தர இருக்கிறார்கள். இதற்கான …
சென்னை சர்வதேச பட விழாவில் நாளை (08/01/2016 ) மாலை ஆறரை மணிக்கு எனது சிறுகதையை மையமாகக் கொண்டு எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரி மாணவர் மோகன்குமார் உருவாக்கிய புர்ரா குறும்படத்தை திரையிடுகிறார்கள். ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்தத் திரையீடு நடைபெறுகிறது.
மதுரை பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் கண்ணனை முதன்முறையாகச் சந்தித்தேன் தீவிர இலக்கிய வாசகர். சமூகசிந்தனைகள் கொண்டவர். மதுரையில் நடைபெற்ற பெரும்பான்மை இலக்கியக்கூட்டங்கள், நாடகங்களில் அவரைச்சந்தித்திருக்கிறேன். உற்சாகமாக உரையாடுவார். சுதேசிகள் நாடகக்குழு எனது உருளும் பாறைகள் நாடகத்திற்கான ஒத்திகை நிகழ்த்திய போது தினமும் அவரைச்சந்தித்து பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். குறைவாக பேசக்கூடியவர், எப்போதும் புன்சிரிப்புடன் பேசும் இயல்பு கொண்டவர். சென்னைக்கு அலுவலக வேலையாக வரும் போது என்னைத் தொடர்பு கொண்டு சந்தித்து உரையாடுவார். எளிமையும் நேசமும் கொண்ட அற்புதமான …
Since we cannot change reality, let us change the eyes that see reality. -Nikos Kazantzakis ஜோர்பா தி கிரேக் (Zorba the Greek) நாவல் 1946ல் வெளியானது. இதுவரை ஐம்பது லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. நவீன கிரேக்க இலக்கியத்தில் கசான்ஸ்சாகிஸ் மிக முக்கியமான எழுத்தாளர். இந்த நாவலை வியந்து பேசும் ஒஷோ, ஜோர்பாவை நவீன காலத்தின் புத்தன் என்கிறார் Zorba is the foundation and Buddha is the …
புத்தாண்டினைச் சிறப்பிக்கும் வண்ணம் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் கசான்ஸ்சாகிஸ் எழுதிய உலகப்புகழ்பெற்ற நாவலான ஜோர்பா தி கிரீக் ( Zorba the Greek ) பற்றி உரை நிகழ்த்த இருக்கிறேன் நாள் : 01.01.2016 வெள்ளிகிழமை இடம்: டிஸ்கவரி புக் பேலஸ். கே.கே.நகர். சென்னை நேரம்: மாலை 6 மணி
இன்றிரவு சென்னை உயிர்மை பதிப்பக அலுவகத்தில் புத்தாண்டு தினச் சந்திப்புகள் நடைபெறுகின்றன. அதில் நான் கலந்து கொண்டு வாசகர்களுடன் உரையாட இருக்கிறேன். இரவு 9 மணி அளவில் உயிர்மை அலுவலகத்திற்கு வந்து சேருவேன். •••