அறிவிப்பு

சேலத்தில்

மே 1 ஞாயிறு  மாலை, சேலம் தமிழ்ச் சங்கத்தில் எழுத்தும் படிப்பும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்

இடக்கை நாவல் குறித்து

இயக்குனர் ராம் தனது முகநூலில் இடக்கை நாவல் குறித்துப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருக்கு  மனம் நிரம்பிய நன்றி. •• படித்ததில் பிடித்தது எஸ்.ராமகிருஷ்ணனின் ”இடக்கை”. பதிப்பகம் : உயிர்மை. 91- 44 – 24993448 www.uyirmmai.com ’சம்பவங்கள் சொற்பமாய் சொற்கள் அதிகமாய்’ கொண்ட எழுத்தைப் படித்து சலித்துப் போன எனக்கு வெகு நாட்களுக்குப் பிறகு சம்பவங்களும் துணைக் கதைகளும் நிறைந்த இடக்கை, பரவச வாசக அனுபவத்தைத் தந்தது. உங்களுக்கு game of thrones (hbo தொலைக்காட்சித் தொடர்) …

இடக்கை நாவல் குறித்து Read More »

கோவையில்

கோவையிலுள்ள  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் விழாவில் கலந்து கொள்ள நாளை( 16. 04. 2016 )கோவை வருகிறேன். மாலையில் நண்பர்கள், வாசகர்களுடன் ஒரு சந்திப்பிற்கு எழுத்தாளர் இரா.முருகவேள் ஏற்பாடு செய்துள்ளார் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

பிறந்த நாள்

இன்று எனது பிறந்தநாள். தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்திய  நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் மிகுந்த நன்றி. பிறந்த நாளில் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது நண்பர்களும் வாசகர்களும் ஒன்றிணைந்து தேசாந்திரி என்ற இலக்கிய அமைப்பினை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை நான் வழிநடத்த இருக்கிறேன். இதன்வழியே இந்தியப்பயணங்கள், சிறுகதை, கவிதை, நாவல், திரைக்கதை பயிற்சிமுகாம்கள், புத்தக அறிமுகக் கூட்டங்கள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், சிறார்களுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சி, குறும்படத்திரையிடல் எனப் பல்வேறு நிகழ்வுகளையும் முன்னெடுத்துச் செயல்படுத்த இருக்கிறார்கள். தேசாந்திரியோடு இணைந்து …

பிறந்த நாள் Read More »

சிறார் நூல்கள்

சிறார்களுக்காக நான் எழுதியுள்ள நூல்களைப் பற்றிய விபரங்களைத் தனியே அனுப்பித் தர இயலுமா என கோவையிலிருந்து ஒரு நூலகர் கேட்டிருந்தார். நேற்று அவருக்காக இந்தப்பட்டியலை மெயிலில் அனுப்பி வைத்திருந்தேன். தேவைப்படும் வாசகர்களுக்காக இதனைப் பகிர்ந்து கொள்கிறேன் 1)   ஏழு தலை நகரம் – விகடன் வெளியீடு-சிறார் நாவல் 2)   கால்முளைத்த கதைகள்-  உயிர்மை வெளியீடு – சிறார் கதைகள் 3)   கிறுகிறுவானம்- பாரதி புத்தகாலயம் – சிறார் நாவல் 4)   அக்கடா – வம்சி பதிப்பகம் -சிறார் …

சிறார் நூல்கள் Read More »

நிலவழி

சமகால இந்திய இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்கள், நாவல்கள் குறித்த  புதிய பத்தி ஒன்றை உயிர்மை இதழில் எழுதத் துவங்கியுள்ளேன். நிலவழி என்ற இத் தொடரின் வழியே குறுக்குவெட்டுத் தோற்றத்தில் இந்திய இலக்கியத்தின் இன்றைய போக்கினை ஆராய முயற்சிக்கிறேன். முதல் கட்டுரையாக அஸ்ஸாமிய எழுத்தாளரான இந்திரா கோஸ்வாமி குறித்தும் அவரது புகழ்பெற்ற நாவலான தென் காமரூபத்தின் கதை குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறேன்

அசோகமித்ரன் சந்திப்பு

டிஸ்கவரி புக் பேலஸ் எனது நான்கு நூல்களை வெளியிட்டுள்ளது. சிறார்களுக்காக நான் எழுதிய படிக்கத்தெரிந்த சிங்கம், மீசையில்லாத ஆப்பிள் ஆகிய புத்தகங்களும், இன்றில்லை எனினும் என்ற கட்டுரைத் தொகுப்பும், ஆதலினால் நூலின் மறுபதிப்பும் வெளியாகியுள்ளன. இந்த நூல்களை எழுத்தாளர் அசோகமித்ரன் அவர்களைச் சந்தித்து நேரில் கொடுத்தேன். என்னோடு டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனும் வந்திருந்தார். இலக்கியக்கூட்டங்களுக்கு  நாற்பது ஐம்பது பேர்களுக்கு மேல் வருவது ஆச்சரியமாக இருக்கிறது என அசோகமித்ரன் பேசத் துவங்கினார். ஆன்டன் செகாவ்வைப் பற்றி அவர் …

அசோகமித்ரன் சந்திப்பு Read More »