அறிவிப்பு

அந்திமழையில்

இம்மாத ( ஜுன் 2016 ) அந்திமழை இதழில் முதல்புத்தகத்தின் வாசனை என்ற சிறப்பு பகுதி இடம்பெற்றுள்ளது.  தனது முதல் புத்தகத்தை வெளியிடுவதற்கு எழுத்தாளர்கள் அடைந்த சிரமங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். உப பாண்டவம் நாவலை வெளியிடுவதற்கு நான் பட்ட அவஸ்தைகளை அதில் பதிவு செய்திருக்கிறேன் எழுத்தாளர்கள் கி.ரா, வண்ணநிலவன். அசோகமித்ரன், நாஞ்சில் நாடன், கலாப்ரியா. ஜெயமோகன். சாருநிவேதிதா, கோணங்கி , இராசேந்திர சோழன்,, சுகுமாரன்.  ஆகியோர் பங்களித்துள்ளார்கள். இப்பகுதி மிகச்சிறந்த தொகுப்பாக  உருவாக்கபட்டுள்ளது.  ஆசிரியர் அசோகனுக்கு எனது மனம் …

அந்திமழையில் Read More »

புத்தகக் கண்காட்சியில்

சென்னை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை, விகடன் பிரசுரம்,  தி இந்து, டிஸ்கவரி புக் பேலஸ் , பாரதி புத்தகாலயம், விஜயா பதிப்பகம்  ஆகிய அரங்குகளில் எனது புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன

இந்திய வானம்

ஆனந்த விகடனில் தொடராக வந்த இந்திய வானம் தற்போது விகடன் பிரசுர வெளியீடாக வந்துள்ளது. சென்னை புத்தக கண்காட்சியில் விகடன் அரங்கில் இந்நூல் விற்பனைக்கு கிடைக்கிறது

கோடைப்பயணம்

நாளை முதல் பதினைந்து நாட்கள்  கோடைப் பயணம் புறப்படுகிறேன். ஜுன் 7 அன்று சென்னை திரும்புவேன். ராஜபாளையத்தில் ஜுன் 4  அன்று நண்பர் சா. தேவதாஸ் ஒரு இலக்கியக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார்.  இடம் நேரம் குறித்து சில நாட்களில் பதிவிடுகிறேன் ஜுன் 5 மதுரையில் நண்பர் முருகேச பாண்டியன் மகள் திருமண நிகழ்விலும் ஜுன் 6 கவிஞர் கலாப்ரியா மகள் திருமண நிகழ்விலும் கலந்து கொள்ள இருக்கிறேன் ••

மூன்றாம் பதிப்பு

நான் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள் நூலின் மூன்றாம் பதிப்பு  வெளியாகியுள்ளது.  இரண்டு  தொகுதிகள் சேர்த்து விலை : ரூ 800 டிஸ்கவரி புக் பேலஸ் இதனை வெளியிட்டுள்ளது நூலை வாங்குவதற்கு அணுகவும் Discovery Book Palace (P)Ltd No.6, Magavir Comlex, 1st Floor Munusamy Salai, K K Nagar West Chennai – 600078 (Near Pondichery Guest house) Ph”+91 44 65157525 , Cell +91 9940446650 Mail: discoverybookpalace@gmail.com

உணவு யுத்தம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ரீ இயற்கை விளைபொருள் அங்காடியில் மே 8 மாலை 5 மணிக்கு  கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் இதில் கலந்து கொள்ளவும்.

சுஜாதா படித்த புத்தகங்கள்

மே 3  2016 அன்று மாலை  5 :30 மணிக்கு,  கவிக்கோ மன்றத்தில் நடைபெற உள்ள சுஜாதா விருதுகள் வழங்கும் நிகழ்வில் சுஜாதா படித்த புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.  உயிர்மை பதிப்பகம் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.