இம்மாத ( ஜுன் 2016 ) அந்திமழை இதழில் முதல்புத்தகத்தின் வாசனை என்ற சிறப்பு பகுதி இடம்பெற்றுள்ளது. தனது முதல் புத்தகத்தை வெளியிடுவதற்கு எழுத்தாளர்கள் அடைந்த சிரமங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். உப பாண்டவம் நாவலை வெளியிடுவதற்கு நான் பட்ட அவஸ்தைகளை அதில் பதிவு செய்திருக்கிறேன்
எழுத்தாளர்கள் கி.ரா, வண்ணநிலவன். அசோகமித்ரன், நாஞ்சில் நாடன், கலாப்ரியா. ஜெயமோகன். சாருநிவேதிதா, கோணங்கி , இராசேந்திர சோழன்,, சுகுமாரன். ஆகியோர் பங்களித்துள்ளார்கள். இப்பகுதி மிகச்சிறந்த தொகுப்பாக உருவாக்கபட்டுள்ளது. ஆசிரியர் அசோகனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்
இதே இதழில் எனது புதிய சிறுகதையும் வெளியாகியுள்ளது

