அறிவிப்பு
இடக்கை -வெளியீட்டு விழா
எனது புதிய நாவல் இடக்கை வெளியீட்டு விழா ஏப்ரல் 3 ஞாயிறு மாலை 6 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் எனது புதிய சிறுகதைத் தொகுப்பு என்ன சொல்கிறாய் சுடரே, மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு ஆயிரம் வண்ணங்கள் இரண்டும் வெளியிடப்பட இருக்கின்றன. உயிர்மை பதிப்பகம் இந்த நூல்களை வெளியிடுகிறது. நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் பற்றிய கூடுதல் விபரங்களை இரண்டு நாளில் தெரிவிக்கிறேன்.
முகிலினி
மிளிர்கல் நாவலின் மூலம் தமிழ் இலக்கியச்சூழலில் தனிக்கவனம் பெற்ற எழுத்தாளர் இரா.முருகவேளின் புதிய நாவல் முகிலினி பொன்னுலகம் பதிப்பகம் சார்பில் வருகின்ற 26 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ருஷ்ய கலாச்சார மையத்தில் வைத்து வெளியிடப்படவுள்ளது. அந்த நிகழ்வில் நாவலை வெளியிட்டு உரையாற்றுகிறேன். நண்பர்கள். வாசகர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
தமிழ் சிறுகதைகள்
தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்து The Tamil Story: Through the Times, Through the Tides என்ற புத்தகமாகத் தொகுத்திருக்கிறார் எழுத்தாளர் திலீப்குமார். சிறுகதைகளை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் சுபஸ்ரீ கிருஷ்ணசாமி. தமிழ் சிறுகதைகளை முதன்மைப்படுத்தி ஆங்கிலத்தில் இவ்வளவு பெரிய தொகைநூல் இதுவரை வெளியானதில்லை. இதுவே முதல்முறை. இதற்காக திலீப்குமாருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள் The Tamil Story: Through the Times, Through the Tides புத்தகத்தை Tranquebar பதிப்பகம் மார்ச் …
விழா புகைப்படங்கள்
நேற்று சாகித்ய அகாதமி நிறுவன நாள் உரை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர் மாலன் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்து சாகித்ய அகாதமி குறித்த விரிவான தகவல்களையும் ,அகாதமியின் பன்முகச்செயல்பாடுகளையும் பகிர்ந்து கொண்டார். எழுத்தாளர் சா.கந்தசாமி, விருட்சம் அழகியசிங்கர், திருப்பூர்கிருஷ்ணன், கே.எஸ், கண்ணன், ஹிந்தி பேராசிரியர் பாலசுப்ரமணியன், இலக்கியவெளிவட்டம் நடராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். சாகித்யஅகாதமியை நேரு உருவாக்கிய விதம் குறித்த அறிமுகத்துடன் அதன் அறுபத்திரெண்டு ஆண்டுகாலப் பணிகளின் நிறைகுறைகள் பற்றி விரிவாகப்பேசினேன். சாகித்ய அகாதமி சென்னை …
சாகித்ய அகாதமி உரை
மார்ச்- 12 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மைலாப்பூர் பாரதீய வித்யாபவனில் நடைபெற உள்ள சாகித்திய அகாதமி நிறுவன நாள் விழாவில் உரையாற்றுகிறேன். இதில் நண்பர்கள் , வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்
செவி சாய்
ஆன்டன் செகாவின் “துக்கம்” என்ற சிறுகதையைத் தழுவி “செவி சாய்” என்ற குறும்படத்தை பவித்ரன் இயக்கியுள்ளார். செகாவ் கதையை தமிழ் சூழலுக்குப் பொருத்தமாக மாற்றியமைத்து அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஆட்டோ டிரைவராகச் சிறப்பாக நடித்துள்ள மகேந்திர பாபுவிற்கு என் வாழ்த்துகள் பவித்ரன் மற்றும் அவரது தொழில்நுட்ப குழுவினர்களுக்கு மனம் நிரம்பிய பாராட்டுகள் SEVISAAI https://youtu.be/MdYarZ_tpYM
சஞ்சாரம் பதிவுகள்
சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டத்தின் வீடியோ பதிவுகள் நன்றி – Shruti.tv எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவல் குறித்த விமர்சன கூட்டத்தில் சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் உரை நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பு Chithra Balasubramanian speech about S. Ramkrishnan’s ‘Sanjaram’ Novel https://www.youtube.com/watch?v=XiSuKE2_1lQ எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவல் குறித்த விமர்சனக்கூட்டத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் ஏற்புரை மற்றும் வாசகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் எஸ்.ரா. நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ் …
தஸ்தாயெவ்ஸ்கி உரை
சேலத்தில் நான் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் மற்றும் வாழ்க்கை பற்றிய ஆற்றிய உரையின் காணொளி இதனைச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ள ஸ்ருதி டிவி ரத்னம் அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் யூடியூப் பகிர்வு: தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’- எஸ் ராமகிருஷ்ணன் https://youtu.be/gGWn18aTc6g