அறிவிப்பு

பிபிஸ்ரீனிவாஸ் கடிதம்

P B ஸ்ரீனிவாஸ் அவர்கள் எனது சிறுகதை விரும்பி கேட்டவளை வாசித்துவிட்டு எனக்கு எழுதிய பாராட்டு கடிதம், இன்று காலையில் தற்செயலாக அதை எடுத்து வாசிக்கையில் மனம் கலங்கிவிட்டது, எங்க வீட்டுப் பெண்  படத்தில் பிபிஎஸ் பாடியுள்ள சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி பாடலை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் ***

தெலுங்கில்

புத்தனாவது சுலபம் என்ற  எனது சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது, இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பாலாஜி, இக்கதை சித்ரா மே 2013 இதழில் வெளியாகி உள்ளது •••

ராமநாதபுரத்தில்

வருகின்ற 05.05.2013 ஞாயிறு காலை ராமநாதபுரம் தமிழ்சங்க நிறுவனர் டாக்டர் எஸ்.எம்.கமால் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறேன், விழா நடைபெறும் இடம் ஆயிர வைசிய மகாஜன சபை திருமண மஹால் வெளிப்பட்டணம், ராமநாதபுரம் நேரம் : காலை பத்துமணி நாள் : மே 5 ஞாயிறு ••••

அஞ்சலி

எனது விருப்பத்திற்குரிய பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் மரணச்செய்தி கேட்டு ஆழ்ந்த துக்கம் அடைந்தேன், ஆனந்தவிகடனில் வெளியான விரும்பிக்கேட்டவள் என்ற எனது சிறுகதையை வாசித்துவிட்டு தொலைபேசி செய்து என்னை மிகவும் பாராட்டினார் பிபிஎஸ், அதன் ஒருவாரத்தில் நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பி அழைத்தார், சந்தித்த நாளில் என் கையைப் பிடித்துக் கொண்டு என்னை மிகவும் கௌரவப்படுத்திவிட்டீர்கள் என்று உணர்ச்சி ததும்பப் பேசி என்னை ஆசிர்வாதம் செய்தார் கடந்த சில மாதங்களில் பலமுறை மணிக்கணக்காக அவருடன் பேசிப் பழகும் சந்தர்ப்பம் …

அஞ்சலி Read More »

பிறந்தநாள்

இன்று எனது பிறந்த நாள், வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் **

தெலுங்கில்

எனது சிறுகதை ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே தெலுங்கில் வெளியாகி உள்ளது, இதனை மொழியாக்கம் செய்திருப்பவர், மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற திருப்பதி பாலாஜி,  விசால ஆந்திரா 7ம் தேதியிட்ட வார இணைப்பில் இந்தக் கதை வெளியாகி உள்ளது.

கால்முளைத்த ஆசை

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குனர் பாலசந்தரின் தயாரிப்பில் நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனர் சொர்ணவேல் இயக்கிய கால்முளைத்த ஆசை என்ற தொலைக்காட்சி குறுந்தொடர் வெளியானது,  திங்கள் முதல் வெள்ளிவரை ஒரு வார காலம் இந்த ஒரு கதை ஒளிபரப்பபட்டது, இதனை அப்படியே தனி ஒரு டெலிவிஷன் திரைப்படமாக வெளியிடுவது என்ற முனைப்புடன் இது உருவாக்கபட்டது. அதன் காணொளி பிரதிகள் எதுவும் என் வசமில்லை,  தற்போது எழுத்தாளரும் நடிகருமான பாரதி மணி அவர்களால் இத்தொடர் மூன்று …

கால்முளைத்த ஆசை Read More »

பிரெஞ்சு படத்தில்

பிரபல பிரெஞ்சு இயக்குனரான Michel Spinosa வின் இயக்கத்தில் உருவான Son épouse ( “His wife”) என்ற பிரெஞ்சு திரைப்படத்தில் நான் பணியாற்றி உள்ளேன், இப்படத்தின் ஒரு பகுதி இந்தியாவில் படமாக்கபட்டுள்ளது, இந்தப் பகுதியின் திரைக்கதை உரையாடலை நான் எழுதியிருக்கிறேன், மிஷேல் ஸ்பினோசா நான்கு முக்கிய பிரெஞ்சுத் திரைப்படங்களை உருவாக்கியவர், அவரோடு இணைந்து பிரெஞ்சு திரைப்படத்தில் பணியாற்றியது சந்தோஷம் தரும் அனுபவமாக அமைந்திருந்தது, இரண்டு மாத காலம் பாண்டிச்சேரி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் …

பிரெஞ்சு படத்தில் Read More »

பிறமொழிகளில்

ஜுனியர் விகடனில் நான் எழுதி வரும் எனது இந்தியாவின் முதல்பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது, புத்தகம் வெளியான நாள் முதல் இன்றுவரை தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், வாழ்த்துகள் எனக்கு வந்தவண்ணம் இருக்கின்றன, வரலாற்றை வாசிப்பதில் உள்ள விருப்பமும், அறியப்படாத உண்மைகளை நோக்கிய வாசகர்களின் தேடுதலும் இப்பத்தியைத் தொடர்ந்து எழுதுவதற்கு மிகுந்த உத்வேகம் தருகின்றது சிறப்பான வடிவமைப்புடன், நேர்த்தியாக உருவாக்கபட்டுள்ள எனது இந்தியா விகடன் பிரசுர வெளியீடாக வந்துள்ளது, எனது இந்தியாவிற்கான அறிமுகக் கூட்டம் நான்கு …

பிறமொழிகளில் Read More »

பென்குவின் தொகைநூல்

சென்னை நகரைப்பற்றி எழுத்தாளர் அம்பை தொகுத்துள்ள The Unhurried City: Writings on Chennai நூலை பென்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது, இந்த நூலில் மிதந்து செல்லும் அறைகள் என்ற எனது கட்டுரையை அம்பை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் சென்னையின் வரலாற்றையும் சென்னை நகரைப் பற்றிய பல்வேறு நினைவுகளையும், படைப்பு இலக்கியங்களையும் உள்ளடக்கிய சிறப்பான தொகுப்பு  இது •••