அறிவிப்பு

புத்தக வெளியீட்டுவிழா

குதிரைகள் பேச மறுக்கின்றன என்ற எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பினை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு உள்ளது, இதற்கான புத்தக வெளியீட்டுவிழா ஜனவரி 22 செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை புத்தக கண்காட்சி புன்னகை அரங்கில் நடைபெற் உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

குதிரைகள் பேச மறுக்கின்றன

குதிரைகள் பேச மறுக்கின்றன என்ற எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு உள்ளது, இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் காட்சியில் அமைந்துள்ள புன்னகை அரங்கில் வருகின்ற 22ம் தேதி செவ்வாய்கிழமை மாலை நான்குமணிக்கு நடைபெற உள்ளது இந்த விழாவில் நேஷனல் புக் டிரஸ்ட் சார்பில் அதன் இயக்குனர் சிக்கந்தர், தமிழ் ஒருங்கிணப்பாளர் மதன்ராஜ், எழுத்தாளர்கள் டி செல்வராஜ், பவா செல்லதுரை, முத்துகிருஷ்ணன், எஸ்கேபி கருணா ஆகியோர் கலந்து கொண்டு …

குதிரைகள் பேச மறுக்கின்றன Read More »

புத்தகக் கண்காட்சியில் நேற்று

புத்தகக் கண்காட்சியில் நேற்றுமாலை காலந்தோறும் கதைகள் என்ற தலைப்பில் உரையாற்றினேன், நல்ல கூட்டம்,  கூட்டம் முடிந்து ஒரு மணி நேரம் நிறைய இளைஞர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன், புத்தக வாசிப்பு எந்த அளவு விரிவடைந்திருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருந்தது நேற்றைய மாலைச் சந்திப்பு கடந்த வாரத்தில் தமிழகத்தில் அகழ்வாய்வுகள் நடைபெற்ற அரிய இடங்களைப் பார்வையிட நண்பர்களுடன் ஒரு பயணம் மேற்கொண்டேன், தமிழக வரலாற்றுச் சின்னங்கள் எந்த அளவு கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன என்பதைக் கண்கூடாக உணர முடிந்தது, …

புத்தகக் கண்காட்சியில் நேற்று Read More »

நான்கு புதிய நூல்கள்

உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள  எனது நான்கு புதிய நூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் உள்ள உயிர்மை புத்தக கடையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன மழை மான்-  எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு பிகாசோவின் கோடுகள்- உலகப்புகழ் பெற்ற ஒவியங்கள், ஒவியர்கள் குறித்த கட்டுரைகள் ரயிலேறிய கிராமம் – உலக அளவில் கவனம்  பெற்ற முக்கியமான புத்தகங்களைப் பற்றி அறிமுக நூல் பறவைக்கோணம்  – உயிர்மை இதழில் தொடராக வெளிவந்த தமிழ்சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு ****

எனது இந்தியா

மிகுந்த வரவேற்புடன் ஜுனியர் விகடனில் தொடராக நான் எழுதி வரும் எனது இந்தியாவின் முதல் பாகம் புத்தகமாக வெளியாகிறது முதல் நூறு கட்டுரைகள் இதில் அடங்கியிருக்கின்றன விகடன் பதிப்பகம் வெளியிட உள்ள இப்புத்தகம் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாக உள்ளது, ஐநூறு பக்க அளவில் மிக நேர்த்தியாக, கெட்டி அட்டையில் உருவாக்கபட்டுள்ளது எனது இந்தியா புத்தக கண்காட்சியில் உள்ள விகடன் பதிப்பக அரங்கில் இந்நூல் விற்பனைக்கு கிடைக்கும் ••••

புத்தகக் கண்ணாடி

சென்னையில் நடைபெற உள்ள 36வது புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சன்நியூஸ் தொலைக்காட்சியில் புத்தகக் கண்ணாடி என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினைத் தொகுத்து அளித்திருக்கிறேன் இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியின் சிறப்பம்சங்கள் எவை, இளைஞர்களிடம் புத்தகம் படிக்கிற பழக்கம் குறைந்து வருகிறதா, பழந்தமிழ் இலக்கியங்கள் இன்றும் வாசிக்கபடுகிறதா, குழந்தைகள் இலக்கியம் புறக்கணிக்கபடுவது ஏன், இணையத்தின் வருகையால் புத்தக வாசிப்பு  குறைந்து வருகிறதா, தொடர்கதைகள் படிக்கும் பழக்கம் தொடராமல் போனது ஏன்,  என்பது போன்ற பல்வேறு விவாதப்பொருளை …

புத்தகக் கண்ணாடி Read More »

ஒலைக்கிளி

இந்த இதழ் ஆனந்த விகடனில் எனது சிறுகதை ஒலைக்கிளி வெளியாகி உள்ளது ••• ஜனவரி 4 வெள்ளி மாலை 6 மணிக்கு  சங்கம் 4 நிகழ்ச்சியில் பயணங்களும் தீராப்பரவசங்களும் என்ற தலைப்பில் பேச இருக்கிறேன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம்: அடையார் சத்யா ஸ்டுடியோ எதிரில் உள்ள இயல்இசை நாடக மன்ற வளாகத்தில் அமைந்துள்ள திருவாடுதுறை  டிஎன் ராஜரத்தினம் கலையரங்கம். நேரம்  : 6 மணி •••

குழந்தைகளுக்கான புத்தகங்கள்

பெற்றோர்களும் குழந்தைகளும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் எவை, யார் வெளியிட்டிருக்கிறார்கள் என்று கேட்டு பலமுறை எனக்கு நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள் அந்த எண்ணத்தை மனதில் கொண்டு குழந்தைகள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகங்களை அறிமுகப்படுத்தி  2013 ஜனவரி 1 முதல் 15 வரை சுட்டிவிகடன் சார்பில் சுட்டித்தமிழ் தொலைபேசியில் பேச இருக்கிறேன், 044 66802905 என்ற எண்ணிற்கு நீங்கள் போன் செய்தால் நான் சிபாரிசு செய்யும் புத்தகத்தினைப் பற்றி தெரிந்து கொள்ளலாம், இது ஒரு பதிவு …

குழந்தைகளுக்கான புத்தகங்கள் Read More »

எனக்குப் பிடித்தவை

2012ம் ஆண்டில் எனக்குப் பிடித்தவை சிறந்த தமிழ் நாவல் – பூமணியின் அஞ்ஞாடி. கலங்கிய நதி பி.ஏ.கிருஷ்ணன். சிறந்த புத்தகம் – ரமாவும் உமாவும் தீலிப்குமார் -சந்தியா பதிப்பகம் சென்னை சிறந்த சிறுகதையாசிரியர் – அழகிய பெரியவன், லட்சுமி சரவணகுமார். எஸ்.செந்தில்குமார், சந்திரா. சிறந்த சிறுகதை -சூனியக்காரியின் தங்கச்சி-  அ.முத்துலிங்கம் சிறந்த கட்டுரை ஆசிரியர்-     எஸ்.வி.ராஜதுரை / சரமாகோ படைப்புகள் குறித்த கட்டுரைகள்,  அ.முத்துகிருஷ்ணன்  கூடங்குளம் தொடர்பான கட்டுரைகள். அபிலாஷ் கிரிக்கெட் பற்றிய கட்டுரைகள் சிறந்த பயணக்கட்டுரை …

எனக்குப் பிடித்தவை Read More »

விருது விழா

ரஷ்யக் கலாச்சார மையத்தால் வழங்கபடும் மாக்சிம் கார்க்கி விருதை சென்னையில் நடைபெற்ற விழாவில் என் அபிமான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டது மிகுந்த சந்தோஷம் தருவதாக அமைந்திருந்தது, இந்த விழாவில் கலந்து கொண்ட ரஷ்யத்தூதுவர் அலெக்சாண்டர் கடாகின்  Prince Alexei Saltykov’s Journeys across India”, என்ற 19ம்நூற்றாண்டு பயணநூல் ஒன்றினை  எனக்கு நினைவுப்பரிசாக வழங்கினார், சித்திரங்களின் தொகுப்பாகிய இந்தநூல் அரிய பதிப்பாகும், இந்த நிகழ்வினை ஒட்டி ரஷ்ய நாட்டுப்புற இசைநடன நிகழ்வு நடைபெற்றது, இது போல …

விருது விழா Read More »