நாவல் போட்டி
நற்றிணை பதிப்பகம் நடத்தும் ப.சிங்காரம் நினைவு நாவல் பரிசுப் போட்டிக்கான அறிவிப்பு
நற்றிணை பதிப்பகம் நடத்தும் ப.சிங்காரம் நினைவு நாவல் பரிசுப் போட்டிக்கான அறிவிப்பு
தீராநதி ஜூன் 2013 இதழில் வெளியாகி உள்ள எனது சிறுகதை கடக்கமுடியாத பாலம் குறித்து தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் எழுதியுள்ள பதிவிது. *** எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை நம் மனசாட்சியை உலுக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை நம் மனசாட்சியை உலுக்கும் சாதிக்கலவரங்கள் சாகா வரம் பெற்றவை போல நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவை எந்தப் பொறியில் துவங்கிக் கொழுந்து விட்டு எரிந்தன என்பது மட்டுமே ஒவ்வொரு முறையும் வேறுபடலாம். அல்லது பழைய பின்னணி மறுபடியும் இருக்கலாம். ஆனால் துவங்கிய பின் நடக்கும் …
P B ஸ்ரீனிவாஸ் அவர்கள் எனது சிறுகதை விரும்பி கேட்டவளை வாசித்துவிட்டு எனக்கு எழுதிய பாராட்டு கடிதம், இன்று காலையில் தற்செயலாக அதை எடுத்து வாசிக்கையில் மனம் கலங்கிவிட்டது, எங்க வீட்டுப் பெண் படத்தில் பிபிஎஸ் பாடியுள்ள சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி பாடலை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் ***
புத்தனாவது சுலபம் என்ற எனது சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது, இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பாலாஜி, இக்கதை சித்ரா மே 2013 இதழில் வெளியாகி உள்ளது •••
வருகின்ற 05.05.2013 ஞாயிறு காலை ராமநாதபுரம் தமிழ்சங்க நிறுவனர் டாக்டர் எஸ்.எம்.கமால் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறேன், விழா நடைபெறும் இடம் ஆயிர வைசிய மகாஜன சபை திருமண மஹால் வெளிப்பட்டணம், ராமநாதபுரம் நேரம் : காலை பத்துமணி நாள் : மே 5 ஞாயிறு ••••
எனது விருப்பத்திற்குரிய பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் மரணச்செய்தி கேட்டு ஆழ்ந்த துக்கம் அடைந்தேன், ஆனந்தவிகடனில் வெளியான விரும்பிக்கேட்டவள் என்ற எனது சிறுகதையை வாசித்துவிட்டு தொலைபேசி செய்து என்னை மிகவும் பாராட்டினார் பிபிஎஸ், அதன் ஒருவாரத்தில் நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பி அழைத்தார், சந்தித்த நாளில் என் கையைப் பிடித்துக் கொண்டு என்னை மிகவும் கௌரவப்படுத்திவிட்டீர்கள் என்று உணர்ச்சி ததும்பப் பேசி என்னை ஆசிர்வாதம் செய்தார் கடந்த சில மாதங்களில் பலமுறை மணிக்கணக்காக அவருடன் பேசிப் பழகும் சந்தர்ப்பம் …
இன்று எனது பிறந்த நாள், வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் **
எனது சிறுகதை ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே தெலுங்கில் வெளியாகி உள்ளது, இதனை மொழியாக்கம் செய்திருப்பவர், மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற திருப்பதி பாலாஜி, விசால ஆந்திரா 7ம் தேதியிட்ட வார இணைப்பில் இந்தக் கதை வெளியாகி உள்ளது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குனர் பாலசந்தரின் தயாரிப்பில் நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனர் சொர்ணவேல் இயக்கிய கால்முளைத்த ஆசை என்ற தொலைக்காட்சி குறுந்தொடர் வெளியானது, திங்கள் முதல் வெள்ளிவரை ஒரு வார காலம் இந்த ஒரு கதை ஒளிபரப்பபட்டது, இதனை அப்படியே தனி ஒரு டெலிவிஷன் திரைப்படமாக வெளியிடுவது என்ற முனைப்புடன் இது உருவாக்கபட்டது. அதன் காணொளி பிரதிகள் எதுவும் என் வசமில்லை, தற்போது எழுத்தாளரும் நடிகருமான பாரதி மணி அவர்களால் இத்தொடர் மூன்று …
பிரபல பிரெஞ்சு இயக்குனரான Michel Spinosa வின் இயக்கத்தில் உருவான Son épouse ( “His wife”) என்ற பிரெஞ்சு திரைப்படத்தில் நான் பணியாற்றி உள்ளேன், இப்படத்தின் ஒரு பகுதி இந்தியாவில் படமாக்கபட்டுள்ளது, இந்தப் பகுதியின் திரைக்கதை உரையாடலை நான் எழுதியிருக்கிறேன், மிஷேல் ஸ்பினோசா நான்கு முக்கிய பிரெஞ்சுத் திரைப்படங்களை உருவாக்கியவர், அவரோடு இணைந்து பிரெஞ்சு திரைப்படத்தில் பணியாற்றியது சந்தோஷம் தரும் அனுபவமாக அமைந்திருந்தது, இரண்டு மாத காலம் பாண்டிச்சேரி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் …