மூன்றாம் நாள் பேருரை கேட்பதற்கு அரங்கில் இடம் கிடைக்காமல் நின்றபடியே கேட்டவர்களின் எண்ணிக்கை இருநூறுக்கும் மேலிருக்கும், பார்வையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவும் அன்பும் பேசுவதற்கு மிகுந்த உத்வேகம் அளிக்கிறது
சத்யஜித்ரே குறித்து விரிவான மலர் வெளியிட்ட பொன்விஜயன் பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன், எப்படியோ அது விடுபட்டு விட்டது, இரவு அவரைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன், அற்புதமான மனிதர், சென்னையில் சிறிய டிரில் அச்சகம் வைத்துக் கொண்டு மிகுந்த சிரமங்களுடன் வாழ்ந்து மறைந்தவர், அவருக்கு ரே மீது தீவிரமான ஈடுபாடு, பல நெருக்கடிகளுக்குள்அவர், சத்யஜித்ரே சிறப்பு மலர் ஒன்றினை கொண்டு வந்திருக்கிறார், மறுபதிப்பு காணாமல் போன அற்புதமான புத்தகமது,
த்ருபோ பற்றிய எனது உரை குறித்து தினமலரில் வெளியான செய்தியிது.