அறிவிப்பு

மூன்று கடிதங்கள்

அன்பிற்குரிய ராமகிருஷ்ணன் தங்களது கவிதையும் கோவிலும் கட்டுரையை வாசித்தேன். கபிலருக்கு விழுப்புரம் மாவட்டத்தின் திருக்கோவிலூரில் ஒரு கோவில் உள்ளது. கபிலர் வடக்கு இருந்து உயிர் துறந்த குன்று அது என்று குறிப்பிடப்படுகிறது. அந்த குன்றில் கபிலருக்கு தனியான  கோவில் உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ளது அக்கோவில். அதை கபிலர் குன்று என்று கூறுகிறார்கள். Nandakumar K nandakumar.raman@gmail.com ***  அன்பின் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,      வணக்கம். தங்களின் எழுத்தின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஏராளமான வாசகர்களின் நானும் …

மூன்று கடிதங்கள் Read More »

சிங்கப்பூர் எழுத்தாளர்கள் .

சமகால சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் அதற்கான தனித்துவத்துடன் பயணம் செய்து கொண்டிருக்கிறது. புதிதாக எழுத  துவங்கியுள்ள இளம் படைப்பாளிகளும் வலைப்பக்கத்தின் வழியே எழுத துவங்கியுள்ள பலரும் கவனிக்கபட வேண்டிய முக்கிய படைப்புகளை உருவாக்கி வருகிறார்கள். இந்நாள் வரையான தமிழ் இலக்கியத்தை புரட்டி போட்டுவிட்டது என்றெல்லாம் மயக்கமடையாமல் தங்களது சூழல் சார்ந்த அக்கறையுடன் செயல்படும் படைப்புகள் இவை. சமகால தமிழ் இலக்கிய போக்கோடு ஒப்பிட்டு சிங்கை தமிழ் இலக்கியத்தை வாசிக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் …

சிங்கப்பூர் எழுத்தாளர்கள் . Read More »

கர்ணமோட்சம்

நான் கதை வசனம் எழுதிய கர்ணமோட்சம் என்ற குறும்படம் கடந்த இரண்டு ஆண்டுகளில் திரைப்படவிழாக்களில் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றதோடு அதிகமான விருதுகளையும் பெற்றிருக்கிறது. கர்ணமோட்சம் குறும்படத்தை சென்னை திரைப்படக்கல்லூரியில் பயின்ற மாணவர் முரளி மனோகர் இயக்கியுள்ளார். அப்படம் தமிழக அரசின் 2005 -2006 ம் ஆண்டுக்கான மாணவர்களுக்கான பிரிவில் சிறந்த இயக்கம் , சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த பதனிடல் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது. அதைத் தொடர்ந்து கேரளாவில் நடைபெற்ற உலகத் திரைப்படவிழா …

கர்ணமோட்சம் Read More »

சிகேகே இலக்கிய விருது.

                      கடந்த முப்பதாண்டு காலமாக ஈரோட்டில் செயல்பட்டு வரும் சிகேகே அறக்கட்டளையின் இலக்கியத்திற்கான விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பதினைந்தாயிரம் பணமும் பாராட்டுச் சான்றிதழும் கொண்டது. இதற்கான விழா ஈரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கத்தில் ஜுலை மாதம் 27தேதி  ஞாயிற்றுகிழமை மாலை (27.7.08) நடைபெற உள்ளது.

Read Singapore -2008 . சிங்கப்பூர் தேர்வு

 சிங்கப்பூர் தேசிய நூலகம் வருடம் தோறும் Read Singapore என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. நல்ல இலக்கியங்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் புதிய படைப்பியக்கத்தை உருவாக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.  இதற்கெனத் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்களை பரவலான வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் செய்வதற்கும்  தேசிய நூலகம் சிறப்பாக ஏற்பாடு செய்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்த ஆண்டு நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன்.  இதற்கென   எனது எட்டு சிறுகதைகள்  பெயரில்லாத ஊரின் பகல்வேளை என்ற தலைப்பில் தனி …

Read Singapore -2008 . சிங்கப்பூர் தேர்வு Read More »

ஒரு லட்சம் பார்வைகள்

எனது இணையதளம் துவங்கப்பட்டு இந்த மூன்று மாத காலத்தில் ஒரு லட்சம் முறை புரட்டப்பட்டு  பார்வையிடப்பட்டிருக்கிறது என்ற சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதை சாத்தியமாக்கிய இணையதளத்தின் வாசகர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். உங்களது பார்வைகளும் அக்கறையும் பலவேளைகளில் என்னை உற்சாகமூட்டியிருக்கின்றன. யோசிக்க வைத்திருக்கின்றன. நம்பிக்கையை உருவாக்கியிருக்கின்றன. அதற்காக யாவருக்கும் என் நிறைந்த அன்பும் நன்றியும். எனது இணைய தளத்தில் வாசகர்களின் பங்களிப்பிற்கு இடமில்லையே என்ற ஆதங்கம் பலரிடமிருந்தும் வந்து கொண்டேயிருக்கிறது. அது உண்மையில்லை. …

ஒரு லட்சம் பார்வைகள் Read More »

யாமம் நாவலுக்கு விருது

            கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற இலக்கிய அமைப்பு ஆண்டு தோறும் தமிழ் எழுத்துலகில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு இயல் விருது அளித்துக் கௌரவப்படுத்துகிறது. இந்த நிகழ்வின் ஒருபகுதியாக சிறந்த நாவல் ஒன்றினைத் தேர்வு செய்து பரிசளிக்கிறார்கள். இந்த ஆண்டு யாமம் நாவல் தேர்வு பெற்று பாராட்டுச் சான்றிதழும் 500 டாலர் பரிசும் பெறுகிறது.

கேள்வியரங்கம்

எனது இணையதளத்தினை தொடர்ந்து பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள். எனக்கு அனுப்பப்பட்ட தனி மின்னஞ்சலில் இருந்த சில கேள்விகளும் சந்தேகங்களும் பொதுவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவை என்ற காரணத்தால் அவற்றை மட்டும் தனித்து பதில் சொல்ல விரும்புகிறேன் பிறமொழி இலக்கியம் ஹைதராபாத்திலிருந்து சிவா இக்கேள்வியை அனுப்பியுள்ளார்: தமிழில் உள்ள மொழிபெயர்ப்பு புத்தகங்களில் எவை முக்கியமானவை. புதிய வாசகர்களுக்கு நீங்கள் எதைச் சிபாரிசு செய்வீர்கள். அவை எங்கே கிடைக்கின்றன ? எஸ்ரா : …

கேள்வியரங்கம் Read More »