கேளாய் திரௌபதி

இயக்குனர் சஷிகாந்த் எனது நெருக்கமான நண்பர், பூனா திரைப்படக்கல்லூரியில் பயின்ற சிறந்த ஒளிப்பதிவாளர், பத்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது கதையை  பஞ்சவன்காடு என்ற பெயரில் ஒரு மணி நேரத் தொலைக்காட்சிப் படமாக இயக்கியிருக்கிறார், இதில் பசுபதி, கலைராணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள், மின்பிம்பங்கள் சார்பில் பால.கைலாசம் அவர்கள் இப்படத்தை தயாரித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக சஷிகாந்த் மரபுக்கலைகள் குறித்த ஆவணமாக்கத்தில் ஈடுபட்டு வருகிறார், செஞ்சி  அருகில் எச்சூர் என்ற கிராமத்தில் நடக்கும் மகாபாரதக் கூத்தை ஆவணப்படுத்தி கேளாய் திரௌபதி என்ற டாகுமெண்டரியை உருவாக்கியிருக்கிறார், இப்படம் பல்வேறு உலகத்திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றுள்ளது

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை ஒவ்வொரு மாதமும் பாரம்பரியம் சார்ந்த ஒரு நிகழ்ச்சியை நடத்திவருகிறது. அக்டோபர் 6 சனிக்கிழமை சஷிகாந்த்தின் ‘கேளாய் திரௌபதி’ ஆவணப்படத்தை அறிமுகம் செய்து திரையிடுகிறார்கள்

நிகழ்ச்சி தி. நகரில் உள்ள தக்கர் பாபா பள்ளியில் மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

•••

Tamil Heritage Trust presents

Kelai Daupadai — A Documentary Film by  Sashikanth

Date and time : October 6th, Saturday, 2012 5.30pm

Venue : Vinobha Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar. Chennai.17

0Shares
0