அந்திமழை இணையதளம் புதியதாக அந்திமழை என்ற மாத இதழ் ஒன்றினைத் துவக்கியுள்ளது, என்.அசோகன் அதன் பொறுப்பு ஆசிரியராகச் செயல்படுகிறார், அதன் வெளியீட்டுவிழா சென்னை அண்ணாசாலையில் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் செப்டம்பர் 29 சனிக்கிழமை மாலை 5.45 மணி அளவில் நடைபெற உள்ளது,
இதனை ஒட்டி அந்திமழை பதிப்பகம் வெளியிட்டுள்ள மூன்று புத்தகங்களின் வெளியிடுதலும் நடைபெற இருக்கிறது
இதில் அசோகன் நாகமுத்து எழுதிய போதியின் நிழல் என்ற யுவான்சுவாங்கின் பயண அனுபவத்தை முன்வைத்து எழுதப்பட்ட நூல் குறித்து நான் பேச இருக்கிறேன்.
இந்நிகழ்வில் அந்திமழை இளங்கோவன், கவிஞர் சுகுமாரன், பாமரன், ஒவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குனர் கரு. பழனியப்பன், சகாயம் ஐஏஎஸ், இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்
இடம் : புக் பாயிண்ட் அரங்கு, அண்ணாசாலை, சென்னை
நாள்: 29.09.2012 நேரம் : மாலை 5.45