அறிவிப்பு

பாண்டிச்சேரியில்

நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி வெளியீட்டுவிழா ஜனவரி 26ந்தேதி மாலை  5 30 மணிக்கு பாண்டிச்சேரியில் உள்ள ஜெயராம் ஓட்டலில் நடைபெற இருக்கிறது. கி.அ.சச்சிதானந்தம் தலைமையில் நடபெறவிருக்கிற நிகழ்வில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன் இந்த நிகழ்வில் எழுத்தாளர் தமிழவன், ந.முருகேசபாண்டியன், ழான் தெலொஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

புத்தக கண்காட்சியில்

கடந்த இரண்டுநாட்களில் புத்தக கண்காட்சியில் வாங்கிய சில முக்கியமான நூல்கள் தமிழர் உணவு /பக்தவசல பாரதி/காலச்சுவடு பதிப்பகம் பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள் /தமிழில் சா தேவதாஸ் /கருத்துபட்டறை பதிப்பகம் என் நண்பர் ஆத்மாநாம் /ஸ்டெல்லா புரூஸ் /விருட்சம் வெளியீடு சம்பத் கதைகள் /விருட்சம் வெளியீடு ஒர் இந்திய கிராமத்தின் கதை  /தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை/சந்தியா பதிப்பகம் மகாத்மாகாந்தி /வின்சென்ட் ஷீன் /வ உசி நூலகம் ஒநாய் குலச்சின்னம்/ ஜியாங் ரோங் /அதிர்வு பதிப்பகம் கோபி கிருஷ்ணன் படைப்புகள் /முழுத்தொகுதி …

புத்தக கண்காட்சியில் Read More »

புத்தக வெளியீட்டுவிழா

குதிரைகள் பேச மறுக்கின்றன என்ற எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பினை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு உள்ளது, இதற்கான புத்தக வெளியீட்டுவிழா ஜனவரி 22 செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை புத்தக கண்காட்சி புன்னகை அரங்கில் நடைபெற் உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

குதிரைகள் பேச மறுக்கின்றன

குதிரைகள் பேச மறுக்கின்றன என்ற எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு உள்ளது, இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் காட்சியில் அமைந்துள்ள புன்னகை அரங்கில் வருகின்ற 22ம் தேதி செவ்வாய்கிழமை மாலை நான்குமணிக்கு நடைபெற உள்ளது இந்த விழாவில் நேஷனல் புக் டிரஸ்ட் சார்பில் அதன் இயக்குனர் சிக்கந்தர், தமிழ் ஒருங்கிணப்பாளர் மதன்ராஜ், எழுத்தாளர்கள் டி செல்வராஜ், பவா செல்லதுரை, முத்துகிருஷ்ணன், எஸ்கேபி கருணா ஆகியோர் கலந்து கொண்டு …

குதிரைகள் பேச மறுக்கின்றன Read More »

புத்தகக் கண்காட்சியில் நேற்று

புத்தகக் கண்காட்சியில் நேற்றுமாலை காலந்தோறும் கதைகள் என்ற தலைப்பில் உரையாற்றினேன், நல்ல கூட்டம்,  கூட்டம் முடிந்து ஒரு மணி நேரம் நிறைய இளைஞர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன், புத்தக வாசிப்பு எந்த அளவு விரிவடைந்திருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருந்தது நேற்றைய மாலைச் சந்திப்பு கடந்த வாரத்தில் தமிழகத்தில் அகழ்வாய்வுகள் நடைபெற்ற அரிய இடங்களைப் பார்வையிட நண்பர்களுடன் ஒரு பயணம் மேற்கொண்டேன், தமிழக வரலாற்றுச் சின்னங்கள் எந்த அளவு கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன என்பதைக் கண்கூடாக உணர முடிந்தது, …

புத்தகக் கண்காட்சியில் நேற்று Read More »

நான்கு புதிய நூல்கள்

உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள  எனது நான்கு புதிய நூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் உள்ள உயிர்மை புத்தக கடையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன மழை மான்-  எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு பிகாசோவின் கோடுகள்- உலகப்புகழ் பெற்ற ஒவியங்கள், ஒவியர்கள் குறித்த கட்டுரைகள் ரயிலேறிய கிராமம் – உலக அளவில் கவனம்  பெற்ற முக்கியமான புத்தகங்களைப் பற்றி அறிமுக நூல் பறவைக்கோணம்  – உயிர்மை இதழில் தொடராக வெளிவந்த தமிழ்சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு ****

எனது இந்தியா

மிகுந்த வரவேற்புடன் ஜுனியர் விகடனில் தொடராக நான் எழுதி வரும் எனது இந்தியாவின் முதல் பாகம் புத்தகமாக வெளியாகிறது முதல் நூறு கட்டுரைகள் இதில் அடங்கியிருக்கின்றன விகடன் பதிப்பகம் வெளியிட உள்ள இப்புத்தகம் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாக உள்ளது, ஐநூறு பக்க அளவில் மிக நேர்த்தியாக, கெட்டி அட்டையில் உருவாக்கபட்டுள்ளது எனது இந்தியா புத்தக கண்காட்சியில் உள்ள விகடன் பதிப்பக அரங்கில் இந்நூல் விற்பனைக்கு கிடைக்கும் ••••

புத்தகக் கண்ணாடி

சென்னையில் நடைபெற உள்ள 36வது புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சன்நியூஸ் தொலைக்காட்சியில் புத்தகக் கண்ணாடி என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினைத் தொகுத்து அளித்திருக்கிறேன் இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியின் சிறப்பம்சங்கள் எவை, இளைஞர்களிடம் புத்தகம் படிக்கிற பழக்கம் குறைந்து வருகிறதா, பழந்தமிழ் இலக்கியங்கள் இன்றும் வாசிக்கபடுகிறதா, குழந்தைகள் இலக்கியம் புறக்கணிக்கபடுவது ஏன், இணையத்தின் வருகையால் புத்தக வாசிப்பு  குறைந்து வருகிறதா, தொடர்கதைகள் படிக்கும் பழக்கம் தொடராமல் போனது ஏன்,  என்பது போன்ற பல்வேறு விவாதப்பொருளை …

புத்தகக் கண்ணாடி Read More »

ஒலைக்கிளி

இந்த இதழ் ஆனந்த விகடனில் எனது சிறுகதை ஒலைக்கிளி வெளியாகி உள்ளது ••• ஜனவரி 4 வெள்ளி மாலை 6 மணிக்கு  சங்கம் 4 நிகழ்ச்சியில் பயணங்களும் தீராப்பரவசங்களும் என்ற தலைப்பில் பேச இருக்கிறேன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம்: அடையார் சத்யா ஸ்டுடியோ எதிரில் உள்ள இயல்இசை நாடக மன்ற வளாகத்தில் அமைந்துள்ள திருவாடுதுறை  டிஎன் ராஜரத்தினம் கலையரங்கம். நேரம்  : 6 மணி •••

குழந்தைகளுக்கான புத்தகங்கள்

பெற்றோர்களும் குழந்தைகளும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் எவை, யார் வெளியிட்டிருக்கிறார்கள் என்று கேட்டு பலமுறை எனக்கு நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள் அந்த எண்ணத்தை மனதில் கொண்டு குழந்தைகள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகங்களை அறிமுகப்படுத்தி  2013 ஜனவரி 1 முதல் 15 வரை சுட்டிவிகடன் சார்பில் சுட்டித்தமிழ் தொலைபேசியில் பேச இருக்கிறேன், 044 66802905 என்ற எண்ணிற்கு நீங்கள் போன் செய்தால் நான் சிபாரிசு செய்யும் புத்தகத்தினைப் பற்றி தெரிந்து கொள்ளலாம், இது ஒரு பதிவு …

குழந்தைகளுக்கான புத்தகங்கள் Read More »