ஒய்வு
கடந்த நான்கு நாட்களாக உடல்நலக்குறைவு. ஒய்வில் இருக்கிறேன். படுக்கை. மருந்துகள். பாதி நேர உறக்கம் என்று பகலும் இரவும் கடந்து போகின்றன. தொடர்ந்த மழை சப்தம் ஜன்னலின் வழியே கேட்டுக் கொண்டிருக்கிறது**சென்ற வாரம் தேவதச்சனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு விசயம் மனதில் ஒடிக் கொண்டேயிருக்கிறது.நடந்து திரிய வேண்டிய அவசியமற்று போனவவைகளுக்கு தான் கண் உருவாகமால் போயிருக்கிறது. அதனால் தான் மரங்களுக்கு கண் இல்லையோ?**சார்லஸ் சிமிக் என்ற அமெரிக்க கவியை தொடர்ந்து வாசித்து வருகிறேன். மிக அற்புதமான …