இரண்டு லட்சம் பார்வைகள்
எனது இணையதளம் கடந்த ஆறுமாதங்களில் இரண்டு லட்சம் பார்வைகளை (Two lakhs Hits) எட்டியிருக்கிறது. இதனைச் சாத்தியப்படுத்திய இணைய வாசகர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி. என்னுடைய வலைத்தளத்தை அறிமுகம் செய்தும், தங்களது வலைப்பக்கத்தில் இணைப்புகள் தந்தும் உள்ள வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். எனது வலைத்தளத்திற்கான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனை செய்து வரும் லீலைராஜன், கோபி மற்றும் ராம்கி ஆகியோருக்கும் இந்தத் தருணத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். …