அடுத்த பயணங்கள்

பிரெஞ்சு இந்தியக் கலை இலக்கிய உறவு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க நாளை பாண்டிச்சேரி செல்கிறேன்,  பிப்ரவரி ஆறு காலை பாண்டிச்சேரி பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான அடிப்படைக் கல்வி குறித்த பயிலரங்கில் கலந்து கொள்ள இருக்கிறேன்

••

பிப்ரவரி 13 முதல் 19 வரை இலங்கைப் பயணம் செல்ல இருக்கிறேன், கொழும்பில் நடைபெற உள்ள ஈழத்து சோமுவின் நினைவுக் கருத்தரங்கில் கலந்து கொள்ள இருக்கிறேன்

••

என்னுடைய உறுபசி மற்றும் துணையெழுத்தின் ஆங்கிலப்பதிப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது, அதன் பன்னாட்டுப் பதிப்பு தொடர்பான சந்திப்பிற்காக பிப்ரவரி 25 முதல் டெல்லியில் நடைபெற உள்ள உலகப் புத்தக கண்காட்சிக்குச் செல்கிறேன், பிப்ரவரி 25 முதல் பிப்ரவரி 29 வரை புதுடெல்லியில் இருக்கிறேன். விருப்பமான நண்பர்களைச் சந்திக்க மெயிலில் தொடர்பு கொள்ளவும்

••

மார்ச் 1 முதல் மார்ச் 5 வரை பஞ்சாப் செல்லத் திட்டமிட்டிருக்கிறேன்

••

0Shares
0