கல்விக்கு உதவுங்கள்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முன்மாதிரியான ஒன்று இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இந்த சாதனையை நிகழ்த்தியவர் பள்ளி ஆசிரியர் பிராங்கிளின்,

இது பற்றி இணையத்தில் நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

தற்போது இப்பள்ளி விரிவுபடுத்தபடும் பணி நடைபெறுகிறது, அதற்கான நிதி உதவி கேட்டு பிராங்கிளின் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்

நண்பர்கள் அனைவரும் அவசியம் இந்தப் பணிக்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்

••

மணல் சுமக்கும் அணில்களைத் தேடி

அன்புடையீர், வணக்கம்.

இராமம்பாளையம் பள்ளியிலிருந்து தங்களைத்தொடர்பு கொள்வதில் மகிழ்வடைகிறோம். தங்களின் வாழ்த்துக்களாலும், இயற்கையின் அருளாலும் மனநிறைவுடன் பணியாற்றி வருகிறோம்.

இராமம்பாளையம் பள்ளியின் வளர்ச்சி குறித்து அறிந்த பலரும் பள்ளிக்கு வருகை தந்து பாராட்டியும், பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

குறிப்பாக 2011-12 ஆம் கல்வியாண்டில் கோயம்புத்துார் மாவட்ட ஆட்சியர் திரு.எம்.கருணாகரன் அவர்கள், கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவர்.கருணாகரன் அவர்கள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அறிவர்.கலாநிதி அவர்கள், கனடா நாட்டு வாட்டர்லுா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் அறிவர். செல்வக்குமார் அவர்கள், கல்வித்துறையின் உயர் அதிகாரிகள், எங்கள் பள்ளியின் செயல்பாடுகளை உலக நாடுகளில் வாழும் பல தமிழர்களுக்கு எடுத்துச்செல்ல காரணமாக இருந்தவர்களான புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், இணைய எழுத்தாளரும் நல்லாலோசகருமான ஈரோடு கதிர் அவர்கள், எழுத்தாளர் யுவகிருஷ்ணா அவர்கள், பல்வேறு இணைய, பத்திரிகை எழுத்தாளர்கள், கர்நாடக மாநிலத்தின் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் (சுமார் 90 பேர்), தமிழக்தின் பல பகுதிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் என பலரும் வருகை தந்த நிலையில், தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள், இணையதள நண்பர்கள் என பலரும் தொடர்ந்து தொடர்பு கொண்டு  பாராட்டி வருவது இராமம்பாளையம் பகுதி கிராம மக்களை மேலும் ஊக்கப்படுத்தி வருகிறது.

அடுத்த கட்டமாக, எதிர்வரும் 2012-13 கல்வியாண்டில் மாணாக்கரின் நலனைக் கருத்தில் கொண்டு மேலும் சில பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.

இதன்படி,

1. நவீன கணினி வகுப்பறை ( Smart computer lab ) கட்டுதல்.

2. பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுதல் (125 மீட்டர் ).

3. மாணவர்களுக்கு உணவுக் கூடம் அமைத்தல்.

4. சமையலறையைப் புதுப்பித்தல்.

5. புதிதாக 11 கணிப்பொறிகள் மற்றும் LCD Projector வாங்குதல்.

6. விளையாட்டு மைதானம் அமைத்தல்.

7. விளையாட்டு தளவாடப்பொருள்கள் வாங்குதல்.

8. பொருள்கள் அறை (Store room) அமைத்தல்.

9.பள்ளி வளாகத்தில் அழகிய தோட்டம் மற்றும் கருத்துப்படங்களைச் சுற்றுச் சுவர்களில் வரைதல்.

10.புதிய தளவாடப் பொருட்கள் வாங்குதல்.

இப்பணிகளை வரும் கல்வியாண்டின் துவக்கத்திற்குள் விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இப்பணிகளுக்கானத் திட்டத் தொகை ரூபாய் 14 இலட்சம் ஆகும். இதில் தமிழக அரசின் மூலம் 8.08 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. திட்டமிட்ட பணிகளை நிறைவு செய்ய இன்னும் சுமார் 6 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

இந்நிலையில் தங்களிடம் ஆலோசனைகளையும், உதவிகளையும் கோர விரும்புகின்றோம். எங்களின் ஆக்கப்பூர்வமான பணிக்குத் தாங்கள் தோள் கொடுத்து உதவினால் பேருதவியாக அமையும்.

தாங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயையும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்வதோடு மிக நேர்த்தியாக, தொலைநோக்குப் பார்வையுடன் பயன்படுத்தப்படும்.

மணலைச்சுமக்கும் அணில்களுக்காகக் காத்திருக்கிறோம்.

Canara Bank Swift code    : CNRBINBBOXC ( வெளிநாடுகளில் வாழ்பவர்கள் )

Canara Bank IFSC Code  : CNRB0001031 ( இந்தியாவில் வாழ்பவர்கள் )

வங்கிக் கணக்கு எண்  : 1031101123120

கணக்கு பெயர்     : PTA, PANCHAYAT UNION PRIMARY SCHOOL, RAMAMPALAYAM.

வங்கி / கிளை     :  CANARA BANK / SIRUMUGAI Branch

பள்ளி முகவரி     :      THE HEADMISTRESS,

PANCHAYAT UNION PRIMARY SCHOOL,

RAMAMPALAYAM, JADAYAMPALAYAM-POST,

SIRUMUGAI- 641302. METTUPALAYAM.

தொடர்பு எண்கள் : ந.சரஸ்வதி         99521 64582

து.பிராங்கிளின்      99424 72672

நன்றியுடன்,

பிராங்கிளின்.
Please visit :www.rmpschool.blogspot.in

0Shares
0