பேருரை -அறிவிப்பு

உலக சினிமா பேருரைகளில் கலந்து கொள்ள ஏதாவது கட்டணம் உள்ளதா எனப் பலரும் கேட்டுள்ளார்கள்,

கட்டணம் எதுவுமில்லை

விருப்பமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்,

சென்ற ஆண்டு வெளியானதைப் போலவே இந்த ஆண்டும் பேருரைகள் தனிடிவிடியாகவும் வெளியிடப்பட இருக்கின்றன

டிசம்பர் 4 முதல் 10 வரை  தினமும் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது,

இதில் ஞாயிறு மட்டும் காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது

அரங்கில் உயிர்மை வெளியிட்டுள்ள எனது புத்தகங்களும், சென்ற ஆண்டு நடைபெற்ற இலக்கிய உரைகளின் டிவிடிகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.

டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஹோமர், ஷேக்ஸ்பியர், ஆயிரத்து ஒரு அராபிய இரவுகள், ஹெமிங்வே, ஜென் கவிதைகள் அடங்கிய உலக இலக்கியப்பேருரைகளின் ஏழு டிவிடிகள் சலுகை விலையில் ரூ 500க்கு விற்பனை செய்யப்படுகின்றன

***

0Shares
0